தாராபுரம் முதல் சென்னை வரை மீண்டும் பேருந்து சேவை தொடக்கம்

தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30 சென்னைக்கும், சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, தாராபுரத்திற்கும் புதிய பேருந்து வரும் என அமைச்சர் சாமிநாதன் தெரிவித்தார்.


திருப்பூர்: தாராபுரம் முதல் சென்னை வரை இயக்கப்பட்டு வந்த பேருந்து பல ஆண்டுகளாக வருவாய் இன்றி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று மீண்டும் பேருந்து சேவையை அமைச்சர்கள் சாமிநாதன் மற்றும் கயல்விழி ஆகியோர் இன்று தொடங்கி வைத்தனர்.



திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்கள், புதிய பேருந்துகள் இயக்கம் மற்றும் நகரப்பேருந்து வழித்தட நீடிப்பு செய்து இயக்கும் பேருந்துகளை செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் மற்றும் ஆதிதிராவிட நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஆகியோர் கொடியசைத்து துவங்கி வைத்தனர்.



இது குறித்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தெரிவித்தாவது, திருப்பூர் மாவட்டம், தாராபுரம் நகராட்சி பேருந்து நிலையத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, சென்னைக்கும், அதே போல சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து மாலை 7.00 மணிக்கு புறப்பட்டு காலை 5.30, தாராபுரத்திற்கும் இந்த புதிய பேருந்து வந்தடையும். இந்த புதிய பேருந்து வசதிகளினால் இந்த பகுதியில் இருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

மேலும், தாராபுரம் பகுதியிலுள்ள உடையார்பாளையத்திற்கு கூடுதலாக நகரப்பேருந்துகள் புதிதாக இரண்டு நடைகள் இயக்கப்படுகிறது. அதனைத்தொடர்ந்து ஏற்கனவே இயக்கப்பட்டிருந்த கோவை-திருச்செந்தூருக்கு இரண்டு புதிய பேருந்துகளும், ஊட்டி மண்டலத்திலிருந்து கூடலூர் திருச்சிக்கு 1 புதிய பேருந்தும், ஈரோடு மண்டலத்திலிருந்து அந்தியூர்- சென்னைக்கு 1 புதிய பேருந்துகளும் இயக்கப்பட இருக்கிறது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் புதிய வழித்தடங்களும், புதிய பேருந்துகளும் இயக்க உத்தரவிட்ட தமிழ்நாடு முதலமைச்சருக்கு எனது சார்பாகவும் இந்த பகுதியின் பொதுமக்கள் சார்பாகவும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.



இந்நிகழ்ச்சியில், தாராபுரம் வருவாய் கோட்டாட்சியர் செந்தில் அரசன், திருப்பூர் மாநகராட்சி 4-ஆம் மண்டலத்தலைவர் இல.பத்மநாபன், தாராபுரம் நகர்மன்றத்தலைவர் பாப்புக்கண்ணன், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக பொது மேலாளர் செல்வக்குமார் மற்றும் உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...