உடுமலை அருகே கொழுமம் சோதனை சாவடி பகுதியில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

இரவு மற்றும் பகல் நேரத்தில் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்துள்ள பழனி சாலையில் கொழுமம் சோதனை சுவாடி அருகில் அமராவதி ஆற்றுப் பாலம் பகுதியில் கடந்த சில தினங்களாகவே முதலை ஒன்று சாலையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் உலா வந்து கொண்டுள்ளது. இதனால் இவ்வழியாக செல்லும் பொதுமக்கள் கடும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

எனவே சம்பந்தப்பட்ட வனத்துறையினர் இப்பகுதியில் தீவிரமாக கண்காணிப்பில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வரும் முதலையை பிடித்து அமராவதி நகர் முதலைப் பண்ணையில் விட வேண்டும் என பொதுமக்கள் தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.



இதற்கிடையில் இப்பகுதிகள் சாலையில் உலா வந்து கொண்டிருக்கும் முதலையின் வீடியோ தற்பொழுது சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகின்றது. இந்நிலையில் கொழுமம் பகுதியில் முதலை நடமாட்டம் உள்ளதால் அமராவதி ஆற்றங்கரை மற்றும் பாலம் பகுதியில் பொதுமக்கள் நடமாட வேண்டாம் என வனத்துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...