கோவையில் சப்வே பணியை விரைவுப்படுத்தக்கோரி ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து சி.பி.எம். கட்சியினரும், பொதுமக்களும் போராட்டம்

சப்வே கட்டுமான பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாலா நகர் பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் நகர்புறத்திற்கு செல்ல வேண்டுமானால் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.



கோவை: கோவை 29 வது வார்டு, பாலா நகர் பகுதியில், 3000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் நகர்ப்புறத்திற்கான இலகுவான சாலை போக்குவரத்து பயணத்துக்காக, செக்கான் தோட்டம் சாலைகள் வழியாக செல்வார்கள். இந்த நிலையிலே செக்கான் தோட்டம், பாலன் நகர் குடியிருப்பு பகுதிகள் வழியாக ரயில்வே தண்டவாளம் செல்வதனால், இந்த பகுதியில் பொதுமக்கள் நீண்ட தூரம் சுற்றி சென்று, மற்ற பகுதிகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டிருக்கின்றன.

இதனை கோரிக்கையாக வைத்திருந்த நிலையில், சப்வே அமைக்க வலியுறுத்தி, இதற்கான கட்டுமான பணிகள் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பித்தனர். இந்தப் பணிகள் கடந்த மூன்று ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டன. இதனால் இந்த பகுதியைச் சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் நகர்புறத்திற்கு செல்ல வேண்டுமானால் ஐந்து கிலோ மீட்டர் தொலைவிற்கு சுற்றி செல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கின்றார்கள்.

அவசர காலகட்டங்களில் ஆம்புலன்ஸ் கூட விரைந்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதனால், உயிரிழப்பு ஏற்பட்டு இருப்பதாக குமுறும் இப்பதி மக்கள், இந்த பால வேலையை உடனடியாக கட்டி முடிக்க வேண்டும் என வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



அப்பொழுது எதிர்பாராத விதமாக ரயில்வே தண்டவாளத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவர்களை காவல்துறை பேசி சமாதானப்படுத்தி அனுப்பினர்.

இந்த நிலையில் சப்வே பணிகள் கிடப்பில் போடப்பட்டிருக்கும் நிலையில், அதனை உடனடியாக ஆரம்பித்து, போக்குவரத்து வசதிக்காக கட்டி முடித்து தர வேண்டுமென ஆர்ப்பாட்டக்காரர்கள் வலியுறுத்தினர். ஒன்றிய பாஜக அரசாங்கம் தென்னக சேலம் ரயில்வே கோட்டமும் உடனடியாக கோரிக்கைக்கு செவி சாய்த்து பணிகளை முடித்து தர வேண்டும் என தெரிவித்தார்கள். தாமதமானால் போராட்டம் அடுத்த கட்டத்தை நோக்கி ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோமென தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...