நாடாளுமன்ற தேர்தலில் இந்தியா கூட்டணிக்கு எம்.ஜி.ஆர் மக்கள் இயக்கம் ஆதரவு - உடுமலையில் நிறுவன தலைவர் லியாகத் அலிகான் பேட்டி

மத்திய அரசு சுய லாபத்திற்காக தேர்தலை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழக அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது என்று எம்ஜிஆர் மக்கள் இயக்கத்தின் நிறுவனத் தலைவர் லியாகத் அலிகான் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள எம்.ஜி.ஆர் மக்கள் இயக்கம் தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நிறுவனத் தலைவர் லியாகத் அலிகான் தலைமையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களிடம் கூறும் பொழுது, வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் எம்ஜிஆர் மக்கள் இயக்கம் இந்திய கூட்டணிக்கு ஆதரவு அளிப்பது

என முடிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் இந்தியா கூட்டணி ஆதரவு தெரிவிப்பதற்கான காரணம் இந்தியா முழுவதும் தற்பொழுது இந்திய கூட்டணியை தமிழக முதல்வர்

மு.க. ஸ்டாலின் மிகச் சிறந்த கட்டமைப்பை உருவாக்கி உள்ளார். எனவே இந்தியா முழுவதும் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்த நிலையில் 2019 ஆம் ஆண்டு குடியுரிமை சட்டம் வருவதற்கான பணிகள் மேற்கொண்ட நிலையில் தற்போது மத்திய அரசு சுய லாபத்திற்காக தேர்தலை கருத்தில் கொண்டு குடியுரிமை சட்டத்தை கொண்டு வந்துள்ளது. இதற்கு தமிழக அரசு உட்பட பல்வேறு மாநிலங்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளனர்.



குடியுரிமை சட்டத்தால் மக்கள் மத்தியில் உணர்வுகளை தூண்டி கலவரத்தை ஏற்படுத்தும் விதமாக இருக்கும் நிலையில் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து உள்ளார். தமிழக முதல்வரின் கருத்துக்கு வலு சேர்க்கும் விதமாக எம்.ஜி.ஆர் மக்கள் இயக்கமும் குடியுரிமை சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளர்கள் அனைவரும் அமோக வெற்றி பெறுவார்கள், பொள்ளாச்சி பாராளுமன்ற தொகுதியில் இந்திய கூட்டணி வேட்பாளர்கள் வெற்றி பெற அயராது பாடுபடுவோம் என தெரிவித்தார்.

ஆலோசனைக் கூட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் சதீஷ்குமார், இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் மூர்த்தி, திராவிட தமிழர் கட்சி தங்கவேல், தமிழர் பண்பாட்டு பேரவை பால் நாராயணன், அப்பாஸ், எம்ஜிஆர் மக்கள் இயக்கம் மாவட்ட செயலாளர் சாகுல் அமீது மற்றும் அந்தியூர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...