திருப்பூரில் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிப்பு - நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளுடன் மாமன்ற உறுப்பினர் வாக்குவாதம்

சாலை விரிவாக்க பணிகள் நேற்று இரவு மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. இதற்கு நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் காங்கேயம் சாலையில் நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் குடியிருப்புகளுக்கு செல்லும் குடிநீர் குழாய் துண்டிக்கப்பட்டதாக மாமன்ற உறுப்பினர் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் தாராபுரம் சாலையிலிருந்து காங்கேயம் சாலை செல்லக்கூடிய மாநகராட்சிக்கு உட்பட்ட 44 வது வார்டு பகுதியில் நெடுஞ்சாலை துறை சார்பில் சுமார் 600 மீட்டர் தூரத்திற்கு சாலை விரிவாக்க பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக நேற்று இரவு பணிகள் மேற்கொண்ட போது சுமார் 2000 வீடுகளுக்கு செல்லக்கூடிய 8 மெயின் குடிநீர் குழாய்கள் துண்டிக்கப்பட்டு இருப்பதாகவும், சாலை விரிவாக்க பணி மேற்கொள்ளும் முன்பாகவே சாலை அமைக்கும் பணிக்காக பள்ளம் தோண்டும்போது மாநகராட்சி மற்றும் குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளை உடன் வைத்துக்கொண்டு குழாய் உடைக்கப்படாமல் பணிகள் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் நெடுஞ்சாலை துறையினர் அதனை கண்டுகொள்ளாமல் அலட்சியமாக செயல்பட்டதன் காரணமாக தொடர்ந்து அப்பகுதியில் குடிநீர் குழாய்கள் உடைக்கப்படுவதாகவும், இதனால் கடந்த ஒரு மாத காலமாக முறையாக பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய முடியாத சூழல் நிலவி வருவதாக குற்றம் சாட்டினர்.



நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுடன் மாமன்ற உறுப்பினர் கண்ணப்பன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனை தொடர்ந்து காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து குடிநீர் குlழாய்கள் சரி செய்த பின்னர் பணிகள் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தனர். நெடுஞ்சாலைத்துறை தொடர்ந்து அலட்சியமாக செயல்பட்டு வருவதாகவும் மாநகராட்சி நிர்வாகம் தொடர்ந்து வலியுறுத்தியும் கூட நெடுஞ்சாலை துறையினர் கண்டும் காணாமல் பணிகள் மேற்கொண்டு வருவதாக குற்றம் சாட்டப்பட்டது.

இதே நிலை தொடருமானால் நெடுஞ்சாலை துறை மற்றும் ஒப்பந்ததாரரை கண்டித்து மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபட போவதாகவும் தெரிவித்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...