கோவை தொப்பம்பட்டியில் நடிகை குஷ்புவின் உருவ பொம்மையை எரித்து திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணியினர் ஆர்ப்பாட்டம்

பெண்களை தவறாக பேசிய நடிகை குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று குஷ்புவின் உருவ படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும், பின்பு தீயிட்டு கொழுத்தியும் திமுக மகளிர் அணியினர் தங்களது எதிர்ப்பை பதிவுசெய்தனர்.


கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பிரிவு பகுதியில் கோவை வடக்கு திமுக மகளிர் அணி மற்றும் திமுக மகளிர் தொண்டர் அணி சார்பில் பி.ஜே.பி கட்சியை சேர்ந்த நடிகை குஷ்புவின் பேச்சிற்கு கண்டனம் தெரிவித்து அவரது உருவ பொம்மை எரித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.



கோவை துடியலூர் அடுத்துள்ள தொப்பம்பட்டி பிரிவு அருகே கோவை வடக்கு மாவட்டம் தி.மு.க மகளிர் அணி மற்றும் திமுக மகளிர் தொண்டர் அணி சார்பில் பி.ஜே.பி கட்சியை சேர்ந்த நடிகை குஷ்புவின் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து அவருக்கு எதிராக கோசங்களை எழுப்பியும் அவரது திரு உருவப்படத்தை செருப்பு மற்றும் துடைப்பத்தால் அடித்தும், உருவ பொம்மையை எரித்தும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு வடக்கு மாவட்ட மகளிர் தொண்டரணி அணி அமைப்பாளர் ரங்கநாயகி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகரன் முன்னிலை வகித்தார். சிறப்பாளர்களாக பெரியநாயக்கன்பாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் மற்றும் மாவட்ட கவுன்சிலர் கார்த்திக், குருடம்பாளையம் ஊராட்சி 9வது வார்டு கவுன்சிலர் அருள்ராஜ் ஆகியோர் கலந்துக்கொண்டனர்.



இந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்களை தவறாக பேசிய குஷ்பு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று திமுக பெண்கள் கோசங்களை எழுப்பினர்.



தொடர்ந்து குஷ்புவின் உருவ படத்தினை கீழே போட்டு காலால் மிதித்தும், தீயிட்டு கொழுத்தியும், குஷ்புவின் உருவ பொம்மையை எரித்தும் தங்களது எதிர்ப்பை காண்பித்தனர்.



அப்போது அங்கு இருந்த போலீசார் உடனடியாக தண்ணீர் ஊற்றினர்.

இந்த நிகழ்ச்சியில் திமுக மகளிர் அணி மற்றும் தொண்டர் அணியைச் சேர்ந்த சுகந்தி, ஜீலா, சித்ரா, சாவித்திரி, பத்ரிபிரியா, ராதா, பர்வீனா, சங்கீத பிரியா, ராணி, வசந்த பிரியா, கண்ணகி, அமுதா, மஞ்சுளா, பத்மாவதி, சரஸ்வதி, ஆனந்தி, அமிர்தா, தேவகி, சரோஜினி, பங்கஜம், செல்வி, சித்ரா, கௌசல்யா, விஜயலட்சுமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் திரளாக் கலந்துக்கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...