மடத்துக்குளம் அருகே துங்காவி கிராமத்தில் கிராமப்புற பெண்கள் தொழில் முனைவோர் மையம் துவக்க விழா

வீட்டு மின்சாதன பொருட்கள் சரியான முறையில் கையாளுதல் மற்றும் பழுதுபார்த்தல், சோப்பு, சலவைத்தூள், பினாயில் முதலான வீட்டு உபயோக பொருட்கள் செய்முறை, கைவினைப் பொருட்கள் செய்முறை கணிப்பொறி பயன்பாடு போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று இணை பேராசிரியர் முனைவர் அறம் தெரிவித்துள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் அருகே துங்காவி கிராமத்தில் ஜிவிஜி விசாலாட்சி மகளிர் கல்லூரி சார்பில் கிராமப்புற பெண்கள் தொழில் முனைவோர் மையத்தின் துவக்க விழா இன்று நடைப்பெற்றது.

கல்லூரியின் செயலர் சுமதி கிருஷ்ண பிரசாத் நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் முனைவர் வேதியியல் துறை இணைபேராசியர் மலர்விழி வரவேற்புரை ஆற்றினார். கல்லூரி முதல்வர் முனைவர் லட்சுமி முன்னுரை ஆற்றினார். அப்போது அவர் பேசுகையில், கிராமப்புற பெண்கள் மேம்பாட்டுக்காக தொழிற்பயிற்சி அளித்தல் திறமையும், விருப்பமும் முயற்சியும் உள்ள பெண்களுக்கு அவர்கள் தொடங்க விரும்பும் தொழில் வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தல், தொழில் துவங்குவதற்கான வங்கி கடன் வாய்ப்புகளை கற்பித்தல், பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் துவங்குவதற்கான அரசு திட்டங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல் ஆகிய மையத்தின் நோக்கத்தை பற்றி எடுத்துரைத்தார். கல்லூரி இயக்குனர் முனைவர் ஜெ.மஞ்சுளா தலைமை உரை ஆற்றினார்.



இயற்பியல் துறை தலைவர் மற்றும் இணை பேராசிரியர் முனைவர் அறம் பேசும் போது தன் உரையில் வீட்டு மின்சாதன பொருட்கள் சரியான முறையில் கையாளுதல் மற்றும் பழுதுபார்த்தல், சோப்பு, சலவைத்தூள், பினாயில் முதலான வீட்டு உபயோக பொருட்கள் செய்முறை, கைவினைப் பொருட்கள் செய்முறை கணிப்பொறி பயன்பாடு போன்ற பயிற்சிகள் கொடுக்கப்படும் என்று கூறினார். கணிதவியல் இணை பேராசிரியர் முனைவர் பத்மாவதி நன்றியுரை நல்கினார்.

மடத்துக்குளம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன், துங்காவி ஊராட்சி மன்ற தலைவர் உமாதேவி காளீஸ்வரன், கிராம பொதுமக்கள் மற்றும் வறுமை ஒழிப்போர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...