கோவையில் கடும் வெயிலால் பட்டுக்கூடு உற்பத்தி பாதிப்பு – ஒரு கிலோ பட்டுக்கூடு ரூ.500-க்கு விற்பனை

இன்று (14-03-2024) ஒருகிலோ பட்டுக்கூடு விலை குறைந்தபட்சமாக ரூ.340-க்கும், சராசரியாக ரூ.432-க்கும், அதிகப்பட்டசமாக ரூ.500-க்கும் ஏலம் போனது என்று பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை மாவட்டத்தில் பட்டுக்கூடு உற்பத்தியில் கணிசமான விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள். அதன்படி கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, தொண்டாமுத்தூர், அன்னூர், மேட்டுப்பாளையம் உள்ளிட்ட

இடங்களில் பட்டுப்புழுக்களை வளர்த்து பட்டுக்கூடுகளை உற்பத்தி செய்கிறார்கள்.

அவ்வாறு உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை கோவை பாலசுந்தரம் சாலையில் உள்ள பட்டுவளர்ச்சித்துறை அலுவலகத்தில் செயல்பட்டு வரும் பட்டுக்கூடு அங்காடியில் விற்று வருவாயை பெருக்கி வருகின்றனர்.

இந்த நிலையில் பட்டுக்கூடுகள் கடந்த மாதம் ஒரு கிலோ குறைந்தபட்சமாக ரூ.370-க்கும், அதிகபட்சமாக ரூ.475 வரைக்கும் விற்றது. இந்த நிலையில் தற்போது இதன் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி ஒரு கிலோ ரூ.500-க்கு விற்கிறது. இதனால் விவசாயிகள் பலர் பட்டுக்கூடுகளை அதிகம் உற்பத்தி செய்து விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

பட்டுக்கூடு விலை உயர்வு குறித்து பட்டு வளர்ச்சித்துறை அதிகாரிகள் கூறுகையில், கோவை பட்டுக்கூடு விற்பனை அங்காடிக்கு கோவை மட்டுமின்றி திருப்பூர் மாவட்டம் அவினாசி, உடுமலைப்பேட்டை, திண்டுக்கல் மாவட்டம் பழனி உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் உற்பத்தி செய்யும் பட்டுக்கூடுகளை விற்பனை செய்து வருகிறார்கள்.

வழக்கமாக பட்டு நூல் விலை அதிகமாக இருக்கும் போது பட்டுக்கூடு விலையும் அதிகரிக்கும். ஆனால் தற்போது பட்டுநூலின் விலை குறைந்து உள்ளது. இருந்தபோதிலும் கடும் வெயில்

காரணமாக பட்டுக்கூடு உற்பத்தி வெகுவாக குறைந்து உள்ளது. இதன் காரணமாக பட்டுக்கூடு விலை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக உயர்ந்து உள்ளது.

அதன்படி இன்று (14-03-2024) ஒருகிலோ பட்டுக்கூடு விலை குறைந்தபட்சமாக ரூ.340-க்கும், சராசரியாக ரூ.432-க்கும், அதிகப்பட்டசமாக ரூ.500-க்கும் ஏலம் போனது என்றனர். பட்டுக்கூடு விலை ஏறுமுகத்தில் உள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...