மகளிர் உரிமைத் தொகை பற்றி பேசிய குஷ்புவை கண்டித்து உடுமலையில் திமுக மகளிர் அணியினர் ஆர்ப்பாட்டம்

மகளிர் உரிமை தொகை குறித்து பேசி பெண்களை நடிகை குஷ்பு அவமதித்துவிட்டதாக கூறி திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.


திருப்பூர்: மகளிர் உரிமை தொகை குறித்து பெண்களை அவமதிக்கும் வகையில் பேசிய பாஜக நிர்வாகி குஷ்புவை கண்டித்து திருப்பூர் தெற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்பில் உடுமலை மத்திய பஸ் நிலையத்தின் அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் அனிதா செல்வராஜ், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் லதா லட்சுமி நாராயணன் ஆகியோர் தலைமை வகித்தனர். அதைத் தொடர்ந்து மகளிர் அணியினர் குஷ்புவை கண்டித்து கோசங்களை எழுப்பியதுடன், மத்திய அரசை கண்டித்தும் பேசினார்கள்.

இறுதியாக குஷ்புவின் உருவப்படத்தை செருப்பால் அடித்தும் தீ வைத்தும் கண்டனத்தை தெரிவித்தனர். இந்த நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முபாரக் அலி, உடுமலை நகரச் செயலாளர் சி.வேலுச்சாமி, துணைச் செயலாளர் வக்கீல் எஸ்.செந்தில்குமார், நகர மன்ற தலைவர் மு.மத்தீன், உடுமலை ஒன்றியக் குழு தலைவர் மகாலட்சுமி முருகன், உள்ளிட்ட ஒன்றிய, நகர, சார்பு அணிகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...