உடுமலை அருகே திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் உண்டியல் பணம் எண்ணிக்கை

12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் 4 லட்சத்து 80 ஆயிரத்து 206 ரூபாய் சேர்ந்துள்ளது. கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த திருமூர்த்திமலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலில் உள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மும்மூர்த்திகள் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்வதற்காக நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் கோவிலுக்கு வந்து செல்கின்றனர்.

அவ்வாறு வருகை தருகின்ற பக்தர்கள் மும்மூர்த்திகளுக்கு நேர்த்தி கடனாகவும், காணிக்கையாகவும் அங்கு வைக்கப்பட்டுள்ள உண்டியலில் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களை செலுத்தி வருகின்றனர். இந்த உண்டியல்கள் கோவில் நிர்வாகத்தின் சார்பில் எண்ணப்பட்டு வருகிறது. அந்த வகையில் கோவிலில் உள்ள கோசாலை உண்டியல் உட்பட 13 உண்டியல் திறக்கப்பட்டது. பின்னர் அதில் சேகரமான காணிக்கை கோவில் அலுவலகத்திற்கு கொண்டு செல்லப்பட்டு எண்ணப்பட்டது.



அதன்படி, 12 உண்டியல்கள் மூலமாக ரூபாய் நோட்டுகள் 4 லட்சத்து 42 ஆயிரத்து 325 ரூபாயும், நாணயங்கள் 37 ஆயிரத்து 881ரூபாயும் ஆக மொத்தம் ரூ.4 லட்சத்து 80 ஆயிரத்து 206 சேர்ந்துள்ளது. அதேபோன்று கோசாலை உண்டியல் மூலமாக ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் ரூ. 1158 கிடைத்துள்ளது.

இந்த உண்டியல்கள் கடந்த முறை ஜனவரி 10 -ம் தேதி எண்ணப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள், கோவில் செயல் அலுவலர் அமரநாதன் உள்ளிட்ட பணியாளர்கள் ஈடுபட்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...