மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது - கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறப்பு விழாவில் நடிகர் ஆரி அறிவுரை

நடிகர் விஜய் தொடங்கியுள்ள கட்சியில் சேர்வதாக இருந்தால் சொல்லிவிட்டு சேருவேன் போக மாட்டேன். நடிகர் விஜய் வெகு நாட்களாக திட்டமிட்டு அரசியலுக்குள் வந்திருக்கின்றார் என்று நடிகர் ஆரி அர்ஜூனன் தெரிவித்துள்ளார்.


கோவை: கோவை மாநகரின் மத்தியில் 50 வருடத்துக்கும் மேலாக கல்விச் சேவையில் சிறந்து விளங்கும் இரத்தினம் கல்விக் குழுமங்கள் சார்பில் கோவில்பாளையத்தில் இரத்தினம் டிப்ஸ் குளோபல் கல்லூரி திறக்கப்பட்டது. விழாவிற்கு இரத்தினம் கல்விக் குழுமங்களின் தலைவர் மதன்.ஆ.செந்தில் தலைமை தாங்கினார். விழாவில் நடிகர் ஆரி அர்ஜுனன் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியாதவது, All to gather. Grow to gather. அனைவரும் ஒன்றாக இருங்கள் ஒன்றாகவே வளருங்கள் விஜய் கட்சியில் சேர்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த ஆரி நான் சேர்வதாக இருந்தால் சொல்லிவிட்டு சேருவேன் போக மாட்டேன். நடிகர் விஜய் வெகு நாட்களாக திட்டமிட்டு அரசியலுக்குள் வந்திருக்கின்றார். அவரை வரவேற்கின்றோம் வாழ்த்துகின்றோம் நல்ல அரசியல் தலைவர்களை எதிர்நோக்கி தமிழ்நாடு எப்பொழுதுமே காத்துக் கொண்டிருக்கின்றது.

நாம ஒவ்வொரு தலைவர்களும் நல்ல அரசியல் தலைவராக இருக்கின்றோமா என்ற ஒவ்வொரு கேள்வியுடன் ஒவ்வொரு தலைவர்களும் இருக்க வேண்டும். அதன் அடிப்படையில் மாற்றத்திற்கான தலைமை அப்படியே உருவாகின்றன. தலைமை அன்பு என்பது காமராஜர், பெரியார், அண்ணா, எம்ஜிஆர் இருந்த ஊர் இது. மறைந்த தலைவர்களை இன்றும் நாம் நினைவில் வைத்து பேசுகின்றோம் என்றால் அவர்களின் புகழ் இன்றளவும் இருக்கின்றன எப்படி அரசியலில் வருகிறோம் என்பது முக்கியமல்ல.



அரசியல் என்ன செய்கிறோம் என்பதே முக்கியம். அதற்காக தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு நல்ல அரசியல் மாற்றத்திற்கான முயற்சிக்கும் அவரது கொள்கைகளுக்கும் வாழ்த்துக்கள் தெரிவித்து இன்று நாம் ஜாதியாலும் மதத்தாலும் பிரிந்து இருக்கின்றோம். ஆனால் கல்லூரியில் மட்டுமே பிரண்ட்ஸ் போல யாரு மச்சான் என நட்பை பேணி வருகின்றோம். இன்றைய நவீன காலத்தில் என்ன கேட்டாலும் ஏ.ஐ. தரும் நட்பை கேட்டால் ஏ.ஐ-யால் தர முடியாது. நண்பர்கள் பிரண்ட்ஷிப்பை புரிந்து கொள்ள வேண்டும். நண்பர்களுக்கும் நெட்வொர்க் ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கல்லூரி மாணவர்கள் போதை பொருட்களுக்கு அடிமையாகக் கூடாது. அவ்வாறு அடிமையாகும் சக நண்பர்களை நண்பர்களே கண்டிக்க வேண்டும்.

பெற்றோர்களுக்கு தெரியாத விசயங்களும் நண்பர்களுக்கு தெரிய வரும். கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் தவறான வழியில் சென்றால் முதலில் அந்த கல்லூரியில் படிக்கும் சக மாணவர்களுக்கே தெரியும் என்பதால் நண்பர்களே அதனை தடுக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...