நல்லாம்பாளையத்தில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மூன்று பேர் கைது - ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு(38), துடியலூரை சேர்ந்த பெயிண்டர் டேவிட் சாம்(40), நல்லாம்பாளையம் அன்னையப்பன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி(35) ஆகிய 3 பேரை கைது செய்து.


கோவை: கோவை கவுண்டம்பாளையம் போலீசார் நேற்று (மார்ச்.14) ரோந்து பணி சென்று கொண்டிருந்தனர். அப்போது நல்லாம்பாளையம் தயிர் இட்டேரி ரோட்டில் உள்ள காலி இடத்தில் 3 பேர் நின்றிருந்தனர். அவர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில், பிடித்து விசாரித்தனர். அதில், அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்தனர்.

பின்னர் போலீசார் அவர்களிடம் சோதனை செய்ததில் அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கவுண்டம்பாளையம் வ.உ.சி நகரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பாபு(38), துடியலூரை சேர்ந்த பெயிண்டர் டேவிட் சாம்(40), நல்லாம்பாளையம் அன்னையப்பன் தெருவை சேர்ந்த ஆட்டோ டிரைவர் கந்தசாமி(35) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். அவர்களிடம் இருந்து 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...