பொள்ளாச்சியை அடுத்த டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் உலாவும் காட்டெருமை – கவனமாக செல்ல வேண்டும் என வனத்துறை எச்சரிக்கை

இன்று காலையில் டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக சென்ற சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையை கடக்க முடியாமல் பாதிவழியிலேயே நிற்க நேரிட்டது.


கோவை: ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட புலி, சிறுத்தை, கரடி, செந்நாய், யானை, காட்டெருமை போன்ற வனவிலங்குகள் அதிக அளவில் உள்ளது. இந்த நிலையில் தற்போது வனப்பகுதியில் வறட்சி நிலவுவதால் உணவு மற்றும் தண்ணீருக்காக வனவிலங்குகள் அவ்வப்போது பொதுமக்கள் பயணிக்கும் சாலைகளின் உலா வருகின்றன.

இந்நிலையில் இன்று காலை டாப்ஸ்லிப் சாலையில் குட்டிகளுடன் காட்டெருமை கூட்டம் உலா வந்து சாலையின் குறுக்கே நின்றது. இதனால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளின் வாகனங்கள் சாலையில் கடக்க முடியாமல் நின்றது. இதனால் இவ்வழியாக பயணிக்க முடியாமல் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.



இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை புகைப்படம் எடுக்குவோ செல்பி எடுக்கவோ அருகில் சென்று தொடவோ முயற்சிக்க வேண்டாம் எனவும், வனவிலங்குகளை துன்புறுத்தக் கூடாது எனவும் கவனமாக வன பாதையை கடக்க வேண்டும் எனவும் வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...

கோவை ஜி.டி. பாலம் கீழ் புதிய பேருந்து நிழற்குடைகள் அமைப்பது குறித்து மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை அவினாசி சாலையில் அமைந்துள்ள ஜி.டி. பாலத்தின் கீழ் நிழற்குடை இல்லாத பேருந்து நிறுத்தங்களில் புதிய நிழற்குடை அமைக்கும...

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...