கோவை - சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் மார்ச் 31-ல் தொடக்கம்

கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவையும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கும் வழங்கப்படும் என்று இண்டிகோ நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


கோவை: கோவை, சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன.

தொழில் நகரான கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் விமான சேவை வழங்கப்படுகின்றன. முன்பு கோவையில் இருந்து முதல் விமானம் காலை 6 மணியளவிலும், அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணியளவிலும் வழங்கப்பட்டு வந்தது.

கடந்த சில மாதங்களுக்கு முன் இரண்டு விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டன. இதனால் கோவையில் இருந்து முதல் விமானம் சென்னைக்கு தினமும் காலை 10 மணிக்கு மேல் தான் வழங்கப்படுகிறது. அதே போல் சென்னையில் இருந்து இரவு 6.50 மணிக்கு கோவைக்கு கடைசி விமான சேவை வழங்கப்பட்டு வருகிறது.

இதனால் ஒரு நாள் பணி நிமித்தமாக சென்னை சென்று திரும்ப முடியாமல் கோவை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களை சேர்ந்த வணிகர்கள், தொழில்துறையினர் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தற்போது மார்ச் 31-ம் தேதி முதல் கோவை-சென்னை இடையே இரண்டு விமான சேவைகள் வழங்கப்படும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து இண்டிகோ நிறுவன அதிகாரிகள் கூறும் போது, கோவை -சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட உள்ளன. இதன்படி கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் காலை 6.30 மணிக்கு முதல் விமான சேவை கிடைக்கும். அதே போல் சென்னையில் இருந்து கோவைக்கு கடைசி விமானம் இரவு 9 மணிக்கு வழங்கப்படும். இந்த விமான சேவை பயணிகளுக்கு மிகுந்த பயனளிக்கும் என நம்புகிறோம் என்றனர்.

தொழில்துறையினர் கூறும் போது, கோவை- சென்னை இடையே மார்ச் 31-ம் தேதி முதல் இரண்டு விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டுள்ளது மிகவும் வரவேற்கத்தக்கது. புதிய சேவைகளால் சென்னைக்கு ஒரு நாள் பணி நிமித்தமாக சென்று வருபவர்கள் அன்றைய தினமே கோவை திரும்ப பெரிதும் உதவும். அதே போல் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து சென்னைக்கு மாலை இரவு 8 மணியளவில் வந்து அங்கிருந்து கோவைக்கு வர விரும்பும் பயணிகளுக்கு இந்த புதிய சேவை மிகவும் பயனளிக்கும் என்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...