1368 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தை வாங்கி இருக்கிறார் கோவையை சேர்ந்த லாட்டரி மாட்டின்

மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் நாட்டில் அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்களை கோவையை சேர்ந்த லாட்டரி மாட்டின் வாங்கி உள்ளார். ஃபியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 1368 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தை லாட்டரி மாட்டின் வாங்கி இருக்கிறார்.


கோவை: மியான்மர் யாங்கூன் நகரில் சாதாரண கூலி தொழிலாளியாக வாழ்க்கையை நடத்தி வந்தவர் கோவையை சேர்ந்த லாட்டரி மார்ட்டின். கடந்த 1988 ஆம் ஆண்டு தமிழகத்தில் லாட்டரி வியாபாரத்தை துவங்கினார். கேரளாவிலும் லாட்டரி விற்பனை கொடி கட்டி பறந்தது. இந்நிலையில் கடந்த 2003 ஆம் ஆண்டு முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தில் லாட்டரி வியாபாரத்தை தடை செய்தார். இதனை அடுத்து நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் லாட்டரி தொழிலை மாற்றினார் மார்டின்.

அங்கு அரசாங்க லாட்டரி திட்டங்களை கையாண்டார். சிக்கிம் லாட்டரி, மேற்குவங்கம், பஞ்சாப், மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களிலும் லாட்டரி தொழிலை நிறுவினார். அது மட்டும் அல்லாமல் பூட்டான், நேபாளம் நாடுகளிலும் லாட்டரி தொழிலை விரிவுபடுத்தினார். இதன் மூலம் இந்தியாவின் லாட்டரி கிங் என்றும் மார்டின் அழைக்கப்பட்டார். இதற்கிடையே தான் 2011 ஆம் ஆண்டு சிக்கிம் அரசிடம் 4500 கோடி ரூபாய் லாட்டரி வியாபாரத்தில் மோசடி செய்ததாக மத்திய புலனாய்வு துறை வழக்கு பதிவு செய்தது.

அதன் பின்னர் தமிழகத்தில் கட்சி சார்ந்து நன்கொடை நிதியாக அதிக அளவில் லாட்டரி மாட்டின் கொடுத்து வந்தார். தொடர்ந்து வருமான வரித்துறை, அமலாக்கத்துறை போன்ற சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டார். லாட்டரி மார்ட்டின் லாட்டரி தொழிலை தொடர்ந்து கட்டுமானம், ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றிலும் கால் பதித்து ஃபியூச்சர் கேமிங் ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் மூலமாக தேர்தல் பத்திரங்களை வாங்கி கட்சிகளுக்கு வழங்கியும் வருகிறார்.

மக்களவைத் தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் நாட்டில் அதிகபட்சமாக தேர்தல் பத்திரங்களை கோவையை சேர்ந்த லாட்டரி மாட்டின் வாங்கி உள்ளார் .

ஃபியூச்சர் கேமிங் அண்டு ஹோட்டல் சர்வீசஸ் என்ற நிறுவனத்தின் பெயரில் 1368 கோடி ரூபாய் தேர்தல் பத்திரத்தை லாட்டரி மாட்டின் வாங்கி இருக்கிறார்.

ஆனால் எந்த கட்சிக்கு எவ்வளவு மதிப்பிலான தேர்தல் பத்திரங்களை லாட்டரி மாட்டின் கொடுத்துள்ளார் என்பது தெரியவில்லை. கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அமலாக்கத்துறை கோவை லாட்டரி மாட்டின் நிறுவனங்களுக்கு சொந்தமான அலுவலகங்கள் வீடுகளில் சோதனை நடத்தியது.

ஐந்து நாட்கள் நடைபெற்ற சோதனையில் 100 கோடி ரூபாய் அளவிலான தேர்தல் பத்திரங்கள் கைப்பற்றப்பட்டது.

அதேபோல் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வருமான வரித்துறை சார்பில் லாட்டரி மாட்டின் தொடர்புடைய அலுவலகங்கள் வீடுகளில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது 65 கோடி ரூபாய் மதிப்பிலான தேர்தல் பத்திரங்கள் கொடுக்கப்பட்டது தெரிய வந்தது. இந்நிலையில் தற்போது நாட்டிலேயே அதிக தொகையில் தேர்தல் பத்திரங்களை லாட்டரி மாட்டின் வாங்கி இருக்கிறார் .

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...