துடியலூர் அருகே சாலையில் கொட்டப்பட்டுள்ள காலாவதியான மிளகாய் தூள் மற்றும் மசால தூளால் வாகன ஓட்டிகள் அவதி

பன்னிமடை பிரிவு பகுதியில் கணுவாய் செல்லும் சாலையில் சிலர் காலாவதியான மிளகாய் தூள் மற்றும் மசாலா பாக்கெட்டுகளை கொட்டிச் சென்றுள்ளதால், வாகன ஓட்டிகளுக்கு கண் எரிச்சல் ஏற்படுகிறது.


கோவை: கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடை ஊராட்சிக்கு உட்பட்ட பன்னிமடை பிரிவு பகுதியில் கணுவாய் செல்லும் சாலையில் சுமார் 200 மீட்டர் தூரத்திற்கு சாலை ஓரங்களில் குப்பைகள் நீண்ட நாட்களாக கொட்டப்பட்டு வருகின்றது.

அந்த இடத்தில் குப்பை கொட்டாதீர்கள் என்று பன்னிமடை ஊராட்சி சார்பில் போர்டு வைத்தும் பயனில்லாமல் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி வருகின்றனர். ஊராட்சி நிர்வாகத்தினரும் அதனை அகற்றாமல் துர்நாற்றம் வீசி வருகிறது.



இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் சிலர் அங்கு காலாவதியான மிளகாய் தூள் மற்றும் மசாலா பாக்கெட்டுகளை கொட்டிச் சென்றுள்ளனர். அவைகள் சாலைகளில் பரவி அதன் மீது வாகனங்கள் ஏறி செல்லும் போது பாக்கெட்டுகள் உடைந்து சாலைகளில் சிதறிக்கிடக்கின்றன.

இதனால் அவ்வழியாக செல்லும் வாகன் ஓட்டிகளில் கண்களில் பட்டு கடும் எரிச்சல் ஏற்பட்டு மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். மேலும் இப்பகுதி பன்னிமடை ஊராட்ட்சி மற்றும் மாநாகராட்சி 1 வது வார்டின் எல்லைப் பகுதியில் வருவதால் இரு நிர்வாகத்தினரும் குப்பைகளை எடுக்காமல் உள்ளனர்.

அதேபோல் அந்த குப்பைகளை தெருவில் சுற்றி தெரியும் நாய்கள் வாசல்களுக்கு முன்னால் கொண்டு வந்து போட்டு அசிங்கம் பண்ணுவதோடு துர்நாற்றம் வீசுவதால் இங்கு நோய் வர அதிக வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

அதேபோல் வாகனத்தில் செல்பவர்கள் கண்ணில் மிளகாய் தூள் பறந்து வந்து படுவதால் விபத்துக்கள் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது . இது நாள் வரை இந்த பகுதியில் இப்படி ஒரு நிலை இருந்ததில்லை என்று அந்த பகுதி மக்கள் கூறியுள்ளனர். உடனடியாக சாலையில் உள்ள குப்பைகளை அகற்ற ஊராட்சி நிர்வாகமோ அல்லது கோவை மாநகராட்சி நிர்வாகமோ நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோயமுத்தூர் மாவட்டம் சாலைகள் பாதுகாப்பு சங்கம் சார்பாக அப்பகுதியில் வாழும் பொதுமக்கள் சார்பாகவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...