மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம்

அச்சக உரிமையாளர்களிடம் அரசியல் கட்சியினர் வேட்பாளர் பிரச்சாரம் தொடர்பான பிரசுரங்களை அச்சடிக்கும் போது அதன் நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் தெரிவித்துள்ளார்.


கோவை: மக்களவைத் தேர்தலை முன்னிட்டு கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் அனைத்து அச்சக உரிமையாளர்கள், பிளக்ஸ் பேனர் உரிமையாளர்களுடன் தேர்தல் விளம்பரம் நோட்டீஸ் மற்றும் விளம்பர பேனர்கள், போஸ்டர்கள் அச்சடிப்பது தொடர்பாகவும். அனைத்து வங்கிகளின் பிரதிநிதிகள், பத்திரிக்கையாளர்கள் மற்றும் தொலைக்காட்சிகளின் செய்தியாளர்கள் ஆகியோருடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான கிராந்திகுமார் பாடி தலைமையில்(மார்ச்.15) நடைபெற்றது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் நடத்தை விதிகள் அமலான உடன் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவரால் எடுத்துரைக்கப்பட்டது. சந்தேகத்திற்குரிய பரிவர்த்தனைகளைக் கண்காணிக்கவும், வங்கிக்கணக்கில் திடீரென ஏற்படும் அளவுக்கதிகமான பரிவர்தனைகளைக் கண்காணிக்கவும், வங்கிப் பணத்தினை எடுத்துச் செல்லும் போது உரிய ஆவணங்களை வங்கி வாகனங்களில் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டது.

மேலும் அச்சக உரிமையாளர்களிடம் அரசியல் கட்சியினர் வேட்பாளர் பிரச்சாரம் தொடர்பான பிரசுரங்களை அச்சடிக்கும் போது அதன் நகலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும், அச்சடிக்கப்படும்அனைத்துப் பிரசுரங்களிலும் அச்சக உரிமையாளர் விவரங்கள் அச்சடிக்கப்பட வேண்டும் எனவும், தவறும்பட்சத்தில் சட்ட விதிமுறைகளின்படி தொடர்புடைய அச்சக உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் பத்திரிக்கையாளர்கள் செய்திகள் வெளியிடும் போது உரிய சட்ட விதிமுறைகளை பின்பற்றவும் கேட்டுக் கொள்ளப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...