பாஜகவில் இணைந்தார் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரைச் செயலாளர் அனுஷா ரவி

மக்கள் நீதி மய்யம் தேர்தல் அரசியலில் பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று அனுஷா ரவி தெரிவித்துள்ளார்.


கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில பரப்புரைச் செயலாளர் அனுஷா ரவி இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மக்கள் நீதி மய்யம் தேர்தல் அரசியலில் (Electoral Politics) பங்கேற்காமல் இருப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை என்பதினால் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் மிகுந்த மனவருத்தத்துடன் ராஜினாமா செய்கிறேன் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

மக்களவை தேர்தலில் மநீம கட்சி போட்டியிடப்போவதில்லை என தலைவர் கமல்ஹாசன் அறிவித்திருந்தார். இதனால் அதிருப்தி அடைந்த அக்கட்சியின் மாநில பரப்புரை செயலாளர் அனுஷா ரவி, அக்கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்தார். இன்று (மார்ச் 16) சென்னையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் முன்னிலையில் அனுஷா ரவி பாஜகவில் இணைந்தார். இது மநீம தொண்டர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...