தாராபுரத்தில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு பூமி பூஜை - நகராட்சி தலைவர் பாப்புகண்ணன் தொடங்கி வைப்பு

2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால், ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார்.


திருப்பூர்: தாராபுரம் நகராட்சி பகுதியில் புதிய நூலக கட்டிடம், மழை நீர் வடிகால் மற்றும் குடிநீர் தொட்டி அமைக்க ரூ.55 லட்சம் மதிப்பிலான புதிய பணிகளுக்கு பூமி பூஜை நடந்தது. இதில் நகராட்சி தலைவர் கு.பாப்புகண்ணன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார்.



இதனை தொடர்ந்து நகராட்சி 4 மற்றும் 7 ஆகிய வார்டு பகுதிகளில் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் புதிய டிஜிட்டல் நூலகம் அமைப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2-வது வார்டு நஞ்சியம்பாளையம் தெரு புதூர் பகுதியில் 7.50 லட்சம் மதிப்பீட்டில் புதிய மழை நீர் வடிகால் அமைப்பதற்கும், புதியகுடிநீர் தொட்டி, ரூ.3 லட்சம் மதிப்பில் நீர்த் தேக்க தொட்டி கட்டிடம் உள்ளிட்ட ரூ.55 லட்சம் மதிப்பிலான பணிகளை நகராட்சி தலைவர் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அப்போது நகர செயலாளர் எஸ்.முருகானந்தம், நகர துணை செயலாளர்கள் வி.கமலக்கண்ணன், செலின் பிலோமினா, 4-வது வார்டு நகர மன்ற உறுப்பினர்கள் ராசாத்திபாணடியன், முபாரக் அலி, 4-வது வார்டு நிர்வாகி இல.மணி, தில்லை முத்து, 3-வது வார்டு செயலாளர் மோகன்ராஜ், பிரதிநிதி மணிவேல், துணைச் செயலாளர் சோமு, பொருளாளர் ஜெயராஜ், அவைதலைவர் கிருஷ்ணமூர்த்தி, மருதமுத்து, ஓவியர் மின்னல், மணி, சண்முகம், திருநாவுக்கரசு, சாரதி, குணசேகரன், பெரியசாமி, தாஸ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...