புளியமரத்தப்பட்டி பகுதியில் காற்றாலையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து

சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்புத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே உள்ள

சின்னப்புத்தூர் ஊராட்சி சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் புளியமரத்துப்பட்டி பகுதியில் ஏராளமான தனியார் நிறுவனங்கள் மின் காற்றாலைகளை நிறுவி காற்றின் மூலம் மின் தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.

இதில் சமய் இந்தியா (பி)லிமிடெட் எனும் தனியார் (windFarm) மின் காற்றாலையில் திடீரென மின் கசிவினால் ஒரு காற்றாலையில் தீ பிடித்து உள்ள நிலையில், தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கும் கோபுரத்தில் இருந்து ஒரு கிளை (விசிறி) கீழே விழுந்துள்ளது.



இரண்டு கிளைகள்(விசிறிகள்) கோபுரத்தில் இருந்து கீழே விழும் தருவாயில் தாராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைக்க முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...