ஏப்ரல் 1ம் தேதி முதல் புதிய ஸ்மார்ட் ரேஷன் கார்டு விநியோகம்


அதிகரித்து வரும் போலி குடும்ப அட்டைகளை தவிர்த்திடும் வகையில் ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டை வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிவித்தது. அதனைத்தொடர்ந்து, ரே‌ஷன் அட்டைகளை ஆதார் தகவலுடன் இணைக்கும் பணி நடைபெற்று 99 சதவிகிதம் ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்களின் பெயர்கள், அவர்களின் ஆதார் எண்கள் மற்றும் செல்போன் எண் போன்ற தகவல்கள், அந்தந்த ரே‌ஷன் கடைகளில் கடந்த 6 மாதங்களாக இணைக்கப்பட்டு வந்தன. ரே‌ஷன் அட்டைதாரரின் புகைப்படங்களை ஸ்மார்ட் அட்டையுடன் இணைக்கும் பணிகளும் முடிந்தது.

இந்நிலையில், ஏப்ரல் 1ம் தேதி முதல் ஸ்மார்ட் ரே‌ஷன் அட்டைகள் வழங்கும் பணியை தமிழக அரசு தொடங்கவுள்ளது. திருவள்ளூர் மாவட்டம், கொரட்டூரில் காலை 11 மணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

இதனைத்தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...