பாராளுமன்ற தேர்தல் குறித்து காங்கேயத்தில் தேர்தல் அலுவலர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

ஈரோடு பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் புகார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயத்தில் சென்னிமலை சாலையில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் ஈரோடு பாராளுமன்ற தொகுதி உதவி தேர்தல் அலுவலர் தலைமையில் காங்கேயம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் தொடர்பான மண்டல அலுவலர்கள் கண்காணிப்பு குறித்தும், பறக்கும் படை அதிகாரிகளுடனும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

பாராளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் ஏப்ரல் 19ஆம் தேதி நடக்க உள்ளது. தேர்தல் சமயத்தில் வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வழிவகைகள், பரிசு பொருட்கள் வழங்குவதை தடுத்து பறிமுதல் செய்வது, பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுக்கள் ஆகியவை அனைத்து பகுதிகளிலும் அமைக்கப்பட்டுள்ளன.



தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள இந்த தேர்தல் கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் புகார்களை கையாளுவது எப்படி என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இந்த ஆலோசனை கூட்டத்தில் உதவி தேர்தல் அலுவலர் ராம்குமார், காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி, அலுவலக மேலாளர் அருணா, நில வருவாய் ஆய்வாளர்கள் விதுர் வேந்தன், சுந்தரி, சந்திரகலா, காங்கேயம் நகராட்சி ஆணையாளர் கனிராஜ், முத்தூர் பேரூராட்சி செயல் அலுவலர் ஆல்பர்ட் மற்றும் காவல்துறையினர்,, வருவாய்த் துறையினர் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...