காங்கேயத்தில் குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீ – தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்திய தீயணைப்புத்துறை

காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் காலியாக இருந்த இடத்தில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் மற்றப்பகுதிகளுக்கு தீ பரவாமல் தண்ணீரை பீய்ச்சியடித்து கட்டுப்படுத்தினர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு பகுதியில் சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலப்பரப்பில் ஏற்பட்ட காட்டுத்தீயால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 1வது வார்டு ஏ.சி.நகரின் எல்லையில் குடியிருப்புகளுக்கு அருகில் கட்டிடம் கட்டப்படாமல் சுமார் ஒரு ஏக்கர் நிலப்பரப்பு காலி மனைகளாக உள்ளது.

இந்த நிலம் முழுவதும் காய்ந்த புற்கள் நிறைந்த காட்டுப் பகுதியாக காட்சியளிக்கிறது. இந்த பகுதியில் மாலை திடீரென ஏற்பட்ட காட்டுத் தீயால் அப்பகுதி தீப்பிடித்து எரியத் தொடங்கியது. மேலும் அருகில் குடியிருப்புகள் உள்ளதால் தீ பரவி குடியிருப்புக்குள் வராமல் தடுக்க உடனடியாக காங்கேயம் தீயணைப்பு நிலையத்திற்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர்.



இந்த பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் அந்த வறண்ட காய்ந்த நிலப்பரப்பில் காட்டுத்தீ மளமளவென பரவத்தொடங்கியது. இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர் காட்டுத்தீயை தண்ணீரை பீய்ச்சி அடித்து கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்‌.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...