ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது – கோவையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் பேட்டி

இந்த நாடு வல்லரசு நாடாக ஆக வேண்டும். இந்த நாட்டின் முகம் மாறி இருக்கிறது. நீலகிரியில் அதிகமான வேலைகளை செய்திருக்கிறோம். கட்சி நிற்க சொன்னால் அங்கு நிற்போம் என்று மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



கோவை: கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் சந்தித்தார். அப்போது அவர் பேசியாதவது, இன்று கோவையில் பிரதமர் கலந்து கொள்ளும் பிரமாணமான ரோட் ஷோ நடக்க உள்ளது. பொதுமக்களின் பேராதர்வோடு கடந்த ஐந்து நாட்களாக பிரதமர் தென் இந்தியா முழுவதும் தன் சுற்றுப்பயணத்தை மேற்கொண்டு இருக்கிறார். நாளை சேலத்தில் பிரமாண்டமான பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது .கடந்த ஒரு வாரமாக தென்னிந்தியா முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு இருக்கிறோம்.

பிரதமரின் வருகை தமிழகத்தில், மேலும் பாஜகவிற்கு மிகப்பெரிய ஊக்கத்தை தந்திருக்கிறது. தமிழ் மக்களுக்கு மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்து இருக்கிறது. பிரதமர் வருகை கடந்த 10 ஆண்டுகளாக சிறந்த நல்லாட்சியை கொடுத்துக் கொண்டிருக்கிறது. இந்தியாவை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வது தான் பிரதமரின் ஒரே எண்ணமாக இருக்கிறது. அடுத்த 25 ஆண்டுகளுக்கு பிக்சின் பாரத் என்ற வளர்ச்சியடைந்த பாரதம் என்பதை தொடர்பாக திட்டங்களை கொடுத்திருக்கிறார் பிரதமர்.



இந்த நாடு வல்லரசு நாடாக ஆக வேண்டும். இந்த நாட்டின் முகம் மாறி இருக்கிறது. மக்களும் பாஜகவுக்கு குறிப்பாக தமிழகத்தில் ஆதரவிருப்பதை பார்க்க முடிகிறது. கோவை மக்கள் பேரன்போடு வரவேற்புக்காக காத்துக் கொண்டிருக்கிறார்கள். தேசத்தின் வளர்ச்சி யார் செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது தெரியும்?. தேசத்துக்கு எதிரானது யார் என்பது தெரியும்?. தேசத்தை கொள்ளை அடிப்பவர்கள் யார் என்பது தெரியும்? இந்திய கூட்டணியின் 2ஜி ஊழல் முறையீடு நடந்து வருகிறது.

திமுக அவர்களின் அமைப்புகளை ஏவி விட்டு தான் தேர்தல் பத்திரங்களை பெற்றார்களா? ஆகாயத்தில் ஊழல் செய்தது யார் 2ஜியில் ஊழல் செய்தது யார்? திமுகவைச் சேர்ந்தவர்கள் ஊழலை பற்றி பேசுவதற்கு திமுகவுக்கு எந்த அருகதையும் கிடையாது. நீலகிரியில் அதிகமான வேலைகளை செய்திருக்கிறோம். கட்சி நிற்க சொன்னால் அங்கு நிற்போம். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...