குண்டடம் பகுதியில் பறக்கும் படை சோதனை - ரூ.15லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளிப் பொருட்கள்

கோவை மாவட்டம் கலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்துச் சென்ற ரூ.15லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளி வளையல்கள், வெள்ளி தோடுகள் ஆகியவற்றை பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்.



திருப்பூர்: நாடு முழுவதும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறுவதை ஒட்டி வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா மற்றும் பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுப்பதற்காக தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி ஈரோடு நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். தாராபுரத்தை அடுத்த குண்டடம் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது அவ்வழியாக மதுரையிலிருந்து கோவை சென்ற காரை சோதனை செய்தனர்.



அப்போது கோவை மாவட்டம் கலம்பாளையம் பகுதியைச் சேர்ந்த மருதாச்சலம் என்பவர் உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற ரூ.15லட்சம் மதிப்புள்ள 13 கிலோ வெள்ளி வளையல்கள், வெள்ளி தோடுகள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் தேர்தல் பறக்கும் படையினர் தாராபுரம் கோட்டாட்சியர் செந்தில் அரசனிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...