உடுமலை திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் திருக்கோவிலில் நீர் மோர் வழங்கும் பணி துவக்கம்

கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர் மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது. இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.



திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த திருமூர்த்தி மலையில் அமணலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. ஆன்மீகம் மற்றும் சுற்றுலா என ஒருங்கிணைந்த தலமான இங்குள்ள மலைக்குன்றில் பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய கடவுள்கள் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்கள். மும்மூர்த்திகளை சாமி தரிசனம் செய்யவும், மலை மீது உள்ள பஞ்சலிங்க அருவியில் குளித்து மகிழவும் நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வெளியூர், வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து திருமூர்த்தி மலைக்கு வருகை தருகின்றனர்.



இந்த சூழலில் கோடை வெப்பத்தின் தாக்கம் வழக்கமான காலத்திற்கு முன்பாகவே தொடங்கி உள்ளது. இதனால் பக்தர்கள், சுற்றுலா பயணிகள் வெப்பத்தின் தாக்கத்தை தணிப்பதற்காக பஞ்சலிங்க அருவியை நாடி வந்த வண்ணம் உள்ளனர். இதனால் கோவில் மற்றும் அருவி பகுதியில் கூட்டம் கணிசமான அளவில் இருந்து வருகிறது.

இந்த சூழலில் கோவிலுக்கு வருகை தருகின்ற பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் நீர்மோர் வழங்கும் திட்டத்தை இந்து சமய அறநிலைத்துறை தொடங்கி உள்ளது. அதன்படி திருமூர்த்தி மலை அமணலிங்கேஸ்வரர் கோவிலில் இந்த திட்டம் தொடங்கப்பட்டது.



அதைத் தொடர்ந்து பக்தர்களுக்கு அறங்காவலர் குழு தலைவர் ரவி மற்றும் உறுப்பினர்கள் ராதாகிருஷ்ணன், தேவராஜ், பானுரேகா, ராஜபாலன், கோவில் நிர்வாகிகள் பக்தர்களுக்கு நீர் மோர் வழங்கினார்கள். இதனால் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த திட்டமானது கோடை காலம் முடியும் வரையிலும் செயல்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...