வால்பாறையில் சாலையில் நடந்து சென்ற 7 காட்டு யானைகள் - வனப்பகுதிக்குள் விரட்டியடித்த வனத்துறையினர்

ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர். வனத்துறையினர் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் விரட்டியடித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறை சுற்று வட்டார பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. காட்டு யானைகள் தேயிலை தோட்ட குடியிருப்பு பகுதிகளை சேதப்படுத்தி வருகிறது. வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகள் கூட்டமாகவும், தனியாகவும் தேயிலைத் தோட்ட குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்து வீடு, மளிகை கடை, சத்துணவு மையம் போன்றவற்றை உடைத்து உள்ளிருக்கும் உணவுப் பொருட்களை சாப்பிட்டு வருகிறது. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். சில சமயம் யானை மனித மோதல் ஏற்பட்டு வருகிறது.

இதை வால்பாறை மற்றும் மானாம்பள்ளி வன சரகம் அதிகாரிகள் யானைகளை ஊருக்குள் வராமல் தடுக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



இந்நிலையில் வால்பாறை பொள்ளாச்சி சாலையில் ஐயர்பாடி எஸ்டேட் பகுதியில் வனப்பகுதியில் இருந்து திடீரென்று சாலையில் நடந்து சென்ற ஏழு காட்டு யானைகளால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்தனர்.



வனப்பகுதியில் இருந்து தேயிலை தோட்ட வழியாக ஏழு காட்டு யானைகள் நடந்து வந்து பொள்ளாச்சி சாலையில் நடந்து சென்றது.



எதிரே வந்த வாகனம் ஓட்டுநர்கள் பயந்து திருப்பி சென்றனர்.

இந்த சம்பவம் அறிந்த வால்பாறை வனச்சாராக அதிகாரி வெங்கடேஷ் தலைமையில் வன காவலர்கள் நீண்ட நேரம் போராடி காட்டு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர். திடீரென்று காட்டு யானைகள் சாலையில் நடந்து சென்றதால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...