கோவையில் நடைபெற்ற பிரதமரின் ரோடு ஷோ நிகழ்ச்சியில் பள்ளி சீருடையில் மாணவர்கள் - விசாரிக்க ஆட்சியர் உத்தரவு

சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இதுகுறித்து விசாரணை நடத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.


கோவை: கோவையில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற ரோடு ஷோ நிகழ்ச்சி நேற்று (மார்ச்.18) நடைபெற்றது. சாய்பாபா கோவில் பகுதியில் துவங்கிய இந்த நிகழ்ச்சியானது ஆர்.எஸ். புரம் பகுதியில் நிறைவடைந்தது. பிரதமர் வரும் வழிகளில் பாஜக தொண்டர்கள், ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் சாலையின் இரு புறங்களில் நின்று ஆர்ப்பரித்தனர். பல்வேறு இடங்களில் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.

இந்நிலையில் சாய்பாபா காலனி பகுதியில் பிரதமர் மோடியை வரவேற்க அரசு பள்ளி மாணவர்கள் சீருடையுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியான நிலையில், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கோவை மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி அவரது எக்ஸ் வலைதள பக்கத்தில் இன்று (மார்ச்.19) தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...