பொதுமக்கள் மனு அளிக்க கோவை மாவட்ட நிர்வாகம் மாற்று ஏற்பாடு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளிக்க வரும் மக்கள், இந்தப் பெட்டிக்குள் மனுக்களை போட்டு செல்லலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. இந்நிலையில் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமைகளில் மாவட்ட ஆட்சித் தலைவர் தலைமையில் நடைபெறும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அவர்களது கோரிக்கை மனுக்களை அளிப்பதற்கு மனுக்கள் பெட்டி வைக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

அதன்படி கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) பொதுமக்கள் மனுக்கள் பெட்டி வைக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியரிடம் மனுக்களை அளிக்க வரும் மக்கள் இந்தப் பெட்டிக்குள் மனுக்களை போட்டு செல்லலாம். பின்னர் அந்த பெட்டியில் இருக்கும் மனுக்கள் எடுக்கப்பட்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...