கவுண்டம்பாளையம் திமுக அலுவலகத்தில் திமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்து திமுக நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி, ஒன்றிய, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் கவுண்டம்பாளையம் பகுதி திமுக கழக அலுவலகத்தில் இன்று (மார்ச்.19) நடைபெற்றது.



இக்கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர்.ரவி, தொகுதி பொறுப்பாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி ஆகியோர் தேர்தலுக்காக முன்னெடுக்க வேண்டிய பணிகள் குறித்த கருத்துக்களை திமுக நிர்வாகிகளுடன் பரிமாறிக் கொண்டனர். உடன் திமுக கழக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

இதேபோல், கோவை பாராளுமன்றத்திற்குட்பட்ட கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி DMK ITWing கலந்தாலோசனை கூட்டம் நேற்று (மார்ச்.18) கவுண்டம்பாளையம் பகுதி கழகத்தில் நடைபெற்றது. இதில் தேர்தல் களத்தில் தொகுதியில் செய்ய வேண்டிய சமூக ஊடக பிரச்சாரம் குறித்து மாநில மாணவர் அணி தலைவர் ராஜீவ் காந்தி முன்னிலையில் திட்டமிடப்பட்டது.



உடன் தமிழ்மறை, மாவட்ட கழக துணைச் செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, ஒன்றிய கழக செயலாளர் சுரேஷ், பகுதி கழக செயலாளர் சகோதரர் சரத் விக்னேஷ், பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், மாவட்ட சிறுபாண்மை அணி அமைப்பாளர் ஆரோக்கிய ஜான், தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட அமைப்பாளர் ஹரிஷ் மற்றும் மாவட்ட துணை, தொகுதி, பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...