பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனையில் நாளை 20.03.2024 உள் நோயாளிகள் பிரிவு தொடக்கம்

நாளை 20.03.2024 முதல் உள் நோயாளிகள் பிரிவு தொடங்கப்பட உள்ளது. இந்த மருத்துவமனையில், முதல் கட்டமாக 50 படுக்கை வசதிகளோடு தரைத்தளமும், முதல் தளமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளது.


கோவை: பேரூர் ஆதீனம் சீர் வளர்ச்சி சாந்தலிங்க ராமசாமி அடிகளார் அறக்கட்டளையின் சார்பில் தொடங்கப்பட்டுள்ள பேரூர் சாந்தலிங்க அடிகளார் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் (பேரூர் அடிகளார் மருத்துவமனை) 01.03.2024 அன்று வெளி நோயாளிகள் பிரிவுடன் தொடங்கப்பட்டது.



அதன் தொடர்ச்சியாக நாளை 20.03.2024 முதல் உள் நோயாளிகள் பிரிவும் தொடங்கப்பட உள்ளது. இம்மமருத்துவமனை நான்கு தளங்களை கொண்ட 115 படுகைகளுடன் கூடிய மருத்துவமனையாக உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 50 படுக்கை வசதிகளோடு தரைத்தளமும், முதல் தளமும் கட்டி முடிக்கப்பட்டுள்ளன.



இந்து அறநிலைத்துறை உயர்மட்ட குழு உறுப்பினராகவுள்ள தவத்திரு சாந்தலிங்க மருதாசல அடிகளார் தலைமையில் இயங்கும் மருத்துவமனையில், தற்போது பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை மருத்துவம், மகப்பேறு மருத்துவம், குழந்தைகள் மருத்துவம், எலும்பு முறிவு சிகிச்சை மருத்துவம், தோல் நோய் மருத்துவம், முகச்சீரமைப்பு மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், 24 மணி நேரமும் செயல்படும் அவசர சிகிச்சை பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, வெளிநோயாளிகள் பிரிவு, குறைந்த கட்டணத்தில் ஆய்வுக்கூடம், 10% சலுகை கட்டணத்தில் மருந்தகம், பல்வேறு அறுவை சிகிச்சை அரங்குகள் ஆகியன செயல்பட்டு கொண்டுள்ளன.



17.03.3024 அன்று மருத்துவமனையின் முதல் இலவச மருத்துவ முகாம் கோவை, குப்பேபாளையத்தில் நடத்தப்பட்டது. மாதந்தோறும் ஏதாவது ஒரு கிராமத்தில் மருத்துவ முகாம் நடைபெறும். குறைந்த செலவில் சிறந்த மருத்துவம் இந்த மருத்துவமனையில் கிடைக்கும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், எக்ஸ்ரே, எக்கோ மற்றும் அனைத்து வசதிகளோடு மருத்துவமனைக்கென தனியாக ஆம்புலன்ஸ் வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. புறநகர் பகுதியில் வாழும் மக்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக அமையும்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...