துடியலூர் அருகே வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையம் தொடக்கம்

சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையத்தின் மூலம் இணைய பாதுகாப்புக் கல்வியில் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அடுத்த தலைமுறை இணைய பாதுகாப்பாளர்களுக்கு நமது டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்கவும், நமது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான திறன்களை மேம்படுத்துவதையும் முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



கோவை: கோவை துடியலூர் அடுத்துள்ள வட்டமலைபாளையம் ஸ்ரீ இராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் தகவல் தொழில் நுட்பத்துறை சார்பாக சைபர் பாதுகாப்பு சிறப்பு ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்துடன் தொடங்கிய துவக்க விழா நிகழ்ச்சியில், தகவல் தொழில் நுட்பத்துறை தலைவர் செந்தமிழ் செல்வி அனைவரையும் வரவேற்றார்.

கல்லூரி முதல்வர் முனைவர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார். ஸ்லும்பெர்ஜர் நிறுவனத்தின் தகவல் தொழில்நுட்ப மைய தலைவர் ரவிச்சந்திரன் துரைராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு ஆராய்ச்சி மையத்தை திறந்து வைத்தார். கௌரவ விருந்தினராக ஈசி கவுன்சிலின் முதன்மை கல்வியாளர் குமார் ஈஷான் கலந்துக்கொண்டு சைபர் பாதுகாப்பு மற்றும் அதன் பயன்பாடுகளை பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.



இந்த சிறப்பு மையமானது, சைபர் பாதுகாப்பில் ஆராய்ச்சி மேற்கொள்ளும் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவியர்களுக்கு, இன்பர்மேஷன் செக்யூரிட்டி ஆடிட் அண்ட் கோவெர்னன்ஸ், கம்ப்யூட்டர் ஹேக்கிங் போரென்சிக் இன்வெஸ்டிகேட்டர், செர்டிபைட் எதிக்கள் ஹேக்கர், செர்டிபைட் செக்யூர் கம்ப்யூட்டர் யூசர் என நான்கு முக்கியமான பாட பயிற்சித் திட்டங்கள், ஈசி கவுன்சிலின் உறுதுணையுடன் வகுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் இணைய பாதுகாப்புக் கல்வியில் சிறந்த கலாச்சாரத்தை வளர்ப்பதையும், அடுத்த தலைமுறை இணைய பாதுகாப்பாளர்களுக்கு நமது டிஜிட்டல் தரவுகளை பாதுகாக்கவும், நமது நாட்டின் எதிர்காலத்தைப் பாதுகாக்க தேவையான திறன்களை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்நிகழ்ச்சிக்கு, எஸ்.என்.ஆர். சன்ஸ் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசுவாமி வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்தார். கல்லூரியின் தொழில் துறை மையத்தின் தலைவர் கணேஷ், ஸ்லும்பெர்ஜர் நிறுவனத்தின் டேலேண்ட் அக்குவிசிஷன் லீடர் ராஜேஸ்வரி, ஹேக்அப் டெக்னாலஜி நிறுவனத்தின் நிறுவனர் தினேஷ் பரந்தாங்கன், கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை தலைவர் கிரேஸ் செல்வராணி, அர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறை தலைவர் கற்பகம், சைபர் பாதுகாப்பு ஆராய்ச்சி மைய பொறுப்பாளர் ஹரி, துறைத்தலைவர்கள், ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மைய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...