கோவையில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சட்டமன்ற தொகுதிகளுக்கு பிரித்தனுப்புவதற்கான கணினி வழியில் குலுக்கல்

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு பிரித்தனுப்புவதற்கான கணினி வழியில் முதலாவது குலுக்கல் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி தலைமையில் நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பு அறையில் (Strong Room) இருப்பு வைக்கப்பட்டிருந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கு பிரித்தனுப்புவதற்கான கணினி வழியில் முதலாவது குலுக்கல் (1st Randomization), மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான கிராந்தி குமார் பாடி தலைமையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில் இன்று (மார்ச்.20) நடைபெற்றது.



இந்நிகழ்வின்போது, பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர், மாவட்ட வருவாய் அலுவலர்ஷர்மிளா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) செந்தில் வடிவு உள்ளிட்ட அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...