ரூ.50 ஆயிரத்திற்கும் மேல் கொண்டு செல்லக்கூடாது என்ற விதிமுறையில் தளர்வு வேண்டும் - வணிகர் சங்க பேரவை கோரிக்கை

திருப்பூரில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு மாடுகளை வாங்கவும், விற்கவும் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்வதாக தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பின் மாவட்ட தலைவர் குளோபல் பூபதி குற்றம்சாட்டியுள்ளார்.


திருப்பூர்: திருப்பூர் ராக்கியாபாளையம் பகுதியில் தனியார் பைனான்ஸ் நிறுவன அலுவலக திறப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை அமைப்பின் மாவட்ட தலைவர் குளோபல் பூபதி கலந்து கொண்டு அலுவலகத்தை திறந்து வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதை காரணம் காட்டி சாதாரணமாக வியாபாரிகள் கொண்டு செல்லும் பணத்தை தேர்தல் ஆணைய விதிமுறை என்ற பெயரில் அதிகாரிகள் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், மளிகை கடைகள் உள்ளிட்ட வணிக நிறுவனங்களுக்கு மொத்தமாக பொருட்கள் வாங்க கொண்டு செல்லும் பணத்திற்கு எந்தவித ஆவணங்களும் இல்லாத நிலையில் அவற்றை பறிமுதல் செய்வதிலிருந்து தளர்வு அளிக்க வேண்டும் எனவும், அதேபோல் திருப்பூர் மாவட்டத்தை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் நடைபெறும் மாட்டுச் சந்தைக்கு மாடுகளை வாங்கவும் விற்கவும் கொண்டு செல்லும் பணத்தையும் தேர்தல் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டு வருவதாகவும், இதற்கு தளர்வு அளிப்பதோடு ஏதேனும் சந்தேகம் இருந்தால் வணிகர் சங்க அமைப்புகளை தொடர்பு கொண்டு அதனை நிவர்த்தி செய்து கொண்டு உடனடியாக பணத்தை விடுவிக்க தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்திற்கும், திருப்பூர் மாவட்ட தேர்தல் அலுவலரிடம் கோரிக்கை வைப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...