கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நாடாளுமன்ற தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம்

கோவை ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தல் குறித்து அதிகாரிகளுடன் ஆட்சியர் ஆலோசனை மேற்கொண்டார்.


கோவை: நாடாளுமன்ற பொது தேர்தல் 2024, நடைபெறுவது தொடர்பாக கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (20.03.2024) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர்கள் (கோயம்புத்தூர்) கிராந்தி குமார் பாடி, (பாலக்காடு) சித்ரா, (திருச்சூர்) கிருஷ்ணன் தேஜா, ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர்.



உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன், மாநகராட்சி ஆணையாளர் மா.சிவகுருபிரபாகரன், மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் (போதை பொருள் தடுப்புபிரிவு) (பாலக்காடு) அப்துல் முநியூர் ஆகியோர் இருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...