கோவை TNAU-வில் மாணவர்களின் தனிப்பட்ட விவரங்களை சேகரிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார்..!

தமிழக ஆளுநரின் உத்தரவின் பெயரில் மாணவர்களிடம் இந்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், இது தேர்தல் விதிமீறல் என்பதால் தமிழக ஆளுநர் மற்றும் வேளாண் பல்கலைகழக துணைவேந்தர் மீது நடவடிக்கை எடுக்க திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் வலியுறுத்தல்.


கோவை: கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் மாணவ, மாணவியரிடம் வாக்காளர் அடையாள அட்டை எண், ஆதார் எண், தொலைபேசி எண் மற்றும் பெற்றோரின் வருவாய் உள்ளிட்ட பல்வேறு விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருவதாகவும், கவர்னர் அலுவலகத்தில் இருந்து கேட்கப்பட்டுள்ளதால் இவை சேகரிக்கப்படுவதாக மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருக்கும் நிலையில் வாக்காளர் அடையாள அட்டை மற்றும் தொலைபேசி எண்கள்சேகரிக்கபடுவது தேர்தல் விதிமீறல் எனவும், தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி மற்றும் வேளாண்மை பல்கலைக்கழக துணை ஆகியோர் கீதா லட்சுமி ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திராவிடர் பண்பாட்டுக் கூட்டியக்கம் சார்பில் இன்று (மார்ச்.21) மனு அளிக்கப்பட்டது.

இது குறிதது பேட்டி அளித்த திராவிடர் பண்பாட்டு கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் வெண்மணி, தமிழ்நாடு ஆளுநரின் உத்தரவின் பெயரில் மாணவர்களிடம் இந்த தகவல்கள் சேகரிக்கப்படுவதாகவும், இது தேர்தல் விதிமீறல் என்பதால் தமிழ்நாடு ஆளுநர் மற்றும் வேளாண் பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி மற்றும் துறை தலைவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.

Newsletter

கோவையில் டெங்கு தடுப்பு: பள்ளி, கல்லூரிகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் வழங்கப்படும்

கோவை மாநகராட்சி 100 வார்டுகளில் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. 28.08.2026 முதல் பள்ளிகள், கல்லூரிகள்...

கோவை மாநகராட்சி மத்திய மண்டலத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்

கோயம்புத்தூர் மாநகராட்சி மத்திய மண்டல பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வார்டு...

கோவை பீளமேடு பகுதியில் டெங்கு ஒழிப்பு உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி வார்டு 27 கவுன்சிலர் அம்பிகா தனபால் பீளமேடு பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு, சாலை அமைப்பு,...

திருப்பூரில் அமராவதி, திருமூர்த்தி அணைகளில் நீர்மட்டம் உயர்வு

திருப்பூர் மாவட்டத்தில் அமராவதி அணையின் நீர்மட்டம் ஆகஸ்ட் 27ஆம் தேதி 59.22 அடியாக உயர்ந்துள்ளது. நீர் பிடிப்பு பகுதிகளில...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

ஆனைமலை, பொள்ளாச்சி, வால்பாறை பகுதிகளில் உள்ள அணைகளில் தென்மேற்கு பருவமழை காரணமாக நீர்மட்டம் உயர்ந்துள்ளது. ஆழியாறு அணையி...

கோவையில் போட்டித் தேர்வு பயிற்சி வகுப்புகளுக்கு ஆசிரியர்கள் தேவை

கோவை மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் TNPSC, SSC, RRB, IBPS போன்ற போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட...