கோவையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு..!

ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைத்து, சரிபார்க்கப்ப்பட்டு உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது.


கோவை: 2024 நாடாளுமன்ற தேர்தல் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதையொட்டி, கோவை தெற்கு வட்டாச்சியர் அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த வாக்குப் பதிவு இயந்திரம், கட்டுப்பாட்டு இயந்திரம் மற்றும் விவி பேட் இயந்திரங்கள், மாவட்டத்தில் உள்ள 10 தொகுதிகளுக்கு தனித்தனியாக துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுகாப்புடன் அனுப்பி வைக்கும் பணி நேற்று (மார்ச்.20) இரவு முதல் நடைபெற்று வருகிறது. 



10 தொகுதிகளுக்கு தேவையான 3719 வாக்கு பதிவு இயந்திரங்கள், 3719 கட்டுப்பாட்டு இயந்திரங்கள் மற்றும் 4026 விவி பேட் இயந்திரங்கள் என 11,464 வாக்கு பதிவு இயந்திரங்கள் துணை இராணுவம் மற்றும் போலீஸ் பாதுக்காப்புடன் வாகனங்களில் அனுப்பி வைக்கப்பட்டது. 



ஒவ்வொரு தொகுதியிலும் அமைக்கப்பட்டுள்ள பாதுக்காக்கப்பட்ட அறையில் பூத் வாரியாக இயந்திரங்கள் பிரித்து வைக்கப்பட்டு, இயந்திரங்கள் சரிபார்க்கப்ப்படுகிறது. இதையடுத்து உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் முன்னிலையில் அறைகள் மூடி சீல் வைக்கப்படுகிறது. 

அதே போல, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டு, கட்டுப்பாட்டு அறையில் இருந்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...