உடுமலையில் அடுத்தடுத்த மூன்று வீடுகளில் 44 பவுன் நகை, ரூ. 2 லட்சம் ரொக்கம் திருட்டு - பொதுமக்கள் அச்சம்..!

இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை.


திருப்பூர் மாவட்டம் உடுமலை அடுத்த எஸ்.வி.புரம்,பி.வி.லே-அவுட்டைச் சேர்ந்தவர் சாந்தாமணி(52). இவர் நேற்று முன்தினம் மாலை வீட்டை பூட்டிக்கொண்டு உறவினர் வீட்டுக்கு சென்றதாக தெரிகிறது. இதனிடையே, இன்று மதியம் 12 மணியளவில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.

அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 40 பவுன் நகை மற்றும் ரூ 1 லட்சத்து 55 ஆயிரம் ரொக்கம் திருடு போனது தெரியவந்தது.

இதே போன்று, எஸ்.வி.புரம், ஆர்.ஜி.நகர் பகுதியைச் சேர்ந்தவர் சத்யாதேவி(29). இவர் கடந்த 16-ம் தேதி வீட்டை பூட்டிக் கொண்டு புதுக்கோட்டைக்கு சென்றதாக தெரிகிறது. பின்னர், இன்று மதியம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார்.



அப்போது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த 2 பவுன் நகை மற்றும் 25 ஆயிரம் பணம் திருடு போனது தெரிய வந்தது.

இதே போல, எஸ்.வி.புரம், கணேசாபுரம் பகுதியை சேர்ந்தவர் நாச்சம்மாள்(75). இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டை பூட்டிக் கொண்டு அவரது மகன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனிடையே இன்று காலை வீட்டுக்கு திரும்பி வந்த போது, கதவு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது.



இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது, பீரோவில் இருந்த ரொக்கம் ரூ 36 ஆயிரம் திருடு போனது தெரிய வந்தது.



இது குறித்து தகவல் அறிந்த உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெ.சுகுமாறன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜீவானந்தம் உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

எஸ்.வி.புரம் பகுதியில் ஒரே இரவில் அடுத்தடுத்த வீடுகளில் நடந்த திருட்டுச் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...