சுவையான ஆட்டு பிரியாணி ரெடி..! பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் அறிவிப்பு குறித்து அமைச்சர் டி. ஆர். பி. ராஜா விமர்சனம்..!

கோவை மக்களவை தொகுதியில் மகத்தான வெற்றி உள்ளது என்ற கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் அறிவிப்பு குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா விமர்சனம்.



கோவை: இப்போது தாங்க செய்தி வந்துச்சு.. மட்டன் பிரியாணியாமே, சுவையான ஆட்டு பிரியாணி ரெடியாக இருக்கிறது என்று கோவை மக்களவை தொகுதியில் மகத்தான வெற்றி உள்ளதாக கோவை பாஜக வேட்பாளர் அண்ணாமலையின் அறிவிப்புக்கு அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா சூசகமாக விமர்சனம் செய்தார். 

கோவையில் நடைபெற்ற திமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பேசிய தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி., ராஜா, à®¤à®®à®¿à®´à®•த்தின் உலக நாடுகள் வியந்து பார்க்கும் வளர்ச்சியை கொடுத்து, தமிழ்நாடு மட்டும் ஏன், தனியாக ஜொலிக்கிறது, செழிக்கிறது, தனித்துவமிக்க மண்ணாக திகழ்வது ஆச்சரியமளிக்கும் வகையில் முதல்வர் ஸ்டாலின் ஆட்சி நடத்தி வருகிறார்.

நம்பர் 1 மாநிலமாக மாற்றி அமைத்து நம் குடும்ப தலைவராக முதல்வர் உள்ளார். 10 ஆண்டுகால இருண்ட ஆட்சியை அகற்ற, கொரோனா பெறு தொற்றை தாண்டி, அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி வளர்ந்த மாநிலமாக மாற்றிய முதல்வரின் வேட்பாளரான கணபதி ராஜ்குமாருக்கு வெற்றியை வழங்க வேண்டும்; இது தேர்தல் அல்ல நம் இனத்தை காப்பாற்ற வேண்டிய போர் தான் கருத வேண்டும், இருண்ட ஆட்சியிலிருந்து மீண்டு விட்டோம், இந்தியாவை சூழ்ச்சியாளர்களிடம் இருந்து மீட்க வேண்டும், முதல்வர் கொண்டு வந்த மகளிர் உரிமை தொகை, காலை உணவு திட்டம் ஆகிய திட்டங்களை மற்ற மாநில முதல்வர்கள் நினைக்கின்றனர். 10 லட்சம் கோடி முதலீட்டை தமிழகத்திற்கு 31 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு கொண்டு வரப்பட்டுள்ளது; கோவை சர்வதேச விமான நிலைய விரிவாக்கம் உட்பட மகத்தான திட்டங்கள் கோவைக்கு வரவுள்ளது; மத்திய அரசு மாறியவுடன் இன்னும் நிறைய திட்டங்கள் வரவுள்ளது என்றார்.

தொழில் வளர்ச்சி என்பது அடுத்தக்கட்ட தொழில் வளர்ச்சி வர வேண்டும் என்பதால் திமுக திட்டங்கள் கொண்டு வரப்பட வேண்டும்; வெகு விரைவில் தேர்தல் முடிந்தவுடன் மகத்தான அறிவிப்புகள் உண்டு, தேர்தல் என்பதால் கோவைக்கு வரும்போது முதல்வர் சூசகமாக திட்டங்களை அறிவிக்க வாய்ப்பு உள்ளது, சமூக ஊடங்கங்களில் கள வீரனும், அனைவரும் துணை கொடுக்க வேண்டும் , வந்து இறங்க வேண்டும். à®¤à®¿à®£à¯à®£à¯ˆ பிரச்சாரம் செய்து கட்சி வளர்த்தோம், எதிரிகள் வாட்ஸ் அப்பில் வளர்க்கின்றனர். அவர்கள் வளர்ந்து விட்டதாக நாம் நினைக்கிறோம். ஆனால் அப்படி ஒரு மண்ணும் இல்லை என்று தெரிவித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...