கோவை துடியலூர் அருகே கள் இறக்கி விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிப்பு..!

ஒவ்வொரு தேர்தலின் போதும், ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்று நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு கூறினார்.


கோவை: கோவை துடியலூர் அருகே வெள்ளக்கிணர் பகுதியில் தோட்டத்தில் தென்னை மரங்களில் கள் இறக்கி விற்பனை செய்து வருவதாக கார்த்திக் என்பவரை துடியலூர் போலீசார் கைது செய்து காவல் நிலைய ஜாமினில் விடுவித்தனர்.

கோவை துடியலூர் அடுத்துள்ள வெள்ளகிணர் பகுதியில் வசிப்பவர் அர்ஜுனன். இவரது மகன் கார்த்திக். இவர்கள் தங்கள் தோட்டத்தில் விவசாயம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தோட்டத்தில் கள் இறக்கிக்கொண்டு இருக்கும் போது துடியலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, இதற்கு அனுமதியில்லை என்று கூறியுள்ளனர்.

அதன்பிறகு கார்த்திக்கை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்று வழக்கு பதிவு செய்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு தலைமையில் விவசாயிகள் அனைவரும் துடியலூர் காவல்நிலையத்திற்கு வந்தனர்.



இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து காவல்துறை அதிகாரிகளிடம் பேசினர். பின்னர், வழக்குப் பதிவு செய்யப்பட்ட கார்த்திக் காவல்நிலைய ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

இதுகுறித்து நாராயணசாமி நாயுடு விவசாயிகள் சங்கம் மாநில தலைவர் ஏ.எஸ்.பாபு பேசுகையில், கர்நாடகா, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் கள் மற்றும் நீரா பானம் இறக்க அனுமதி உள்ளது. ஆனால் தமிழ்நாட்டிற்கு மட்டும் இல்லை. தொடர்ந்து நாங்கள் அனுமதி கேட்டு வருகின்றோம். ஒவ்வொரு தேர்தல் நடைபெறும்போது, ஆட்சி அமைக்கும் கட்சியினர் விவசாயிகளுக்கு கள் இறக்க அனுமதி வழங்குவோம் என்று கூறுகிறார்கள். ஆனால் இதுவரை இல்லை. கள் இறக்குதல் என்பது விவசாயிகளின் உரிமை போராட்டம் ஆகும். காவல்துறை தலையிட்டால் கடுமையான போராட்டம் செய்வோம் என்று கூறினர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...