காங்கேயத்தில் ஒரே நாளில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை - 3 இடங்களில் ரூ.3,52,450 பணம் பறிமுதல்

மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூன்று ஆட்டு வியாபாரிகள் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 450 ரொக்க பணமும், அலம்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் சிவன்மலை அருகே வாகன சோதனையின் போது உரிமம் இன்றி எடுத்து வரப்பட்ட பணம் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரொக்கமும், முத்தூரை சேர்ந்த அகிலன்‌ என்ற ஆட்டு வியாபாரி ரூ. 64 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை எடுத்துவரும் போது வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த மூன்று ஆட்டு வியாபாரிகள் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 450 ரொக்க பணமும், அலம்பாடியை சேர்ந்த செந்தில்குமார் என்பவர் நகை வாங்க திருப்பூர் செல்லும் வழியில் சிவன்மலை அருகே வாகன சோதனையின் போது உரிமம் இன்றி எடுத்து வரப்பட்ட பணம் ரூ.1 லட்சத்து 63 ஆயிரத்து 500 ரொக்கமும், மேலும் முத்தூரை சேர்ந்த அகிலன்‌ என்ற ஆட்டு வியாபாரி ரூ. 64 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை எடுத்துவரும் போது வாகன சோதனையில் பறிமுதல் செய்யப்பட்டது. பறிமுதல் செய்யப்பட்ட ரொக்க பணம் ரூ.3,52,450 ரூபாயும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாச்சியர் மயில்சாமியிடம் ஒப்படைக்கபட்டது.

வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் போதிய உரிமமின்றி பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்த பட்டிருக்கின்றது. இந்த நிலையில் திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவில் பகுதியை வெள்ளகோவில்- முத்தூர் சாலையில் தனியார் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மதுரை மாவட்டத்தை சேர்ந்த தனிக்கொடி, நாகராஜ் மற்றும் சந்திரசேகர் ஆகிய மூன்று ஆட்டு வியாபாரிகள் சுமார் ரூ.1 லட்சத்து 24 ஆயிரத்து 450 ரொக்க பணத்தை கொண்டு வந்துள்ளனர். எனவே தேர்தல் நடத்தைக்குட்பட்ட மதிப்பை விட தனிநபர் அதிக அளவு தொகையை எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 1 லட்சத்து 24 ஆயிரத்து 450 ரொக்கப் பணத்தையும், லோடு ஆட்டோவையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

காங்கேயம் அடுத்த ஆலாம்பாடி ஊராட்சியை சேர்ந்தவர் செந்தில் குமார்.



இவர் காங்கேயம் திருப்பூர் சாலையில் நகை வாங்குவதற்கு உரிமமின்றி ரூ. 1 லட்சத்து 63 ஆயிரத்து 500 எடுத்து சென்றுள்ளார். அப்போது சிவன்மலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த பறக்கும் படை அதிகாரிகள் அவரது காரை நிறுத்தி சோதனை செய்ததில் அவர் வைத்திருந்த பணம் பறிமுதல் செய்யப்பட்டது

இதே போல் காங்கேயம் அடுத்த முத்தூர்-ஈரோடு சாலையில் தனியார் பள்ளி அருகே தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது முத்தூரை சேர்ந்த அகிலன்‌ என்ற ஆட்டு வியாபாரி ரூ. 64 ஆயிரத்து 500 ரொக்க பணத்தை எடுத்து வந்திருந்தார். தேர்தல் நடத்தைக்குட்பட்ட மதிப்பை விட தனிநபர் அதிக அளவு தொகையை எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் ரூ. 64 ஆயிரத்து 500 ரொக்கப் பணத்தையும், லோடு ஆட்டோவையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமி மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் ஆகியோரிடம் ஒப்படைத்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...