காரில் கஞ்சா பறிமுதல் - பெண்ணிடம் போலீசார் விசாரணை

சரவணம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மார்ச்.22 சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாகன எண் (நம்பா் பிளேட்) இல்லாமல் வந்த ஒரு மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் இருந்து 50 கிராம் கஞ்சா பிடிபட்டது.


கோவை: கோவை, சரவணம்பட்டி பகுதியில் தோ்தல் பறக்கும் படையினா் மார்ச்.22 சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது வாகன எண் (நம்பா் பிளேட்) இல்லாமல் வந்த ஒரு மாருதி காரை நிறுத்தி சோதனை செய்தனா். இதில் காரில் இருந்து 50 கிராம் கஞ்சா பிடிபட்டது. 

இதையடுத்து அந்த காரை ஓட்டி வந்த பெண்ணிடம் விசாரித்தபோது அவா் சரவணம்பட்டியைச் சோ்ந்த சுவாதி (27) என்பதும், சென்னையில் திரைப்படத் துறையில் ஒளிப்பதிவாளராகப் பணியாற்றி வருவதும் தெரிந்தது. 

அவரிடம் நடத்திய தொடா் விசாரணையில் சென்னையில் இருந்து வந்திருந்த தனது நண்பா் நிசாக் என்பவரை கோவை விமான நிலையத்தில் இறக்கிவிட்டு வந்ததாகவும், அவா் அந்த கஞ்சாவை தனது காரில் மறந்து வைத்துச் சென்றிருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளாா். இதுதொடா்பாக சரவணம்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...