கோவையில் கிறிஸ்துவர்களுக்கு புனித வாரத்தை தொடங்கி வைத்த குருத்தோலை ஞாயிறு ஊர்வலம்

கோவை காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக நடைபெற்ற குருத்தோலை ஞாயிறு ஊர்வலத்தின் மூலம், இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணத்தை நினைவுகூறும் புனித வாரம் தொடங்கியது.



Coimbatore: இயேசு கிறிஸ்துவின் சிலுவை மரணம் மற்றும் உயிர்ப்பு ஆகியவற்றை நினைவுகூறும் புனித வாரத்தின் தொடக்கமாக, மார்ச் 24 ஆம் தேதி கோவையில் குருத்தோலை ஞாயிறு ஊர்வலம் நடைபெற்றது. பிப்ரவரி 14 தொடங்கிய 40 நாட்கள் தவக்காலத்தின் முடிவில் புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது.

காந்திபுரம் சி எஸ் ஐ கிறிஸ்து நாதர் ஆலயம் முன்பாக துவங்கிய இந்த ஊர்வலத்தில் ஆயர் தலைவர் டேவிட் பர்னபாஸ், செயலாளர் ஜெயச்சந்திரன், பொருளாளர் ரவி இன்பசிங், உதவி ஆயர் சாம் ஜெபசுந்தர், சபை ஊழியர் சந்தோஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



குருத்தோலைகளை ஏந்திக்கொண்டு "ஓசன்னா ஓசன்னா" என்று பாடியபடி ஆண்கள், பெண்கள், குழந்தைகள் சேர்ந்து ஊர்வலமாக சென்றனர். ஐந்தாவது வீதி மற்றும் முக்கிய வீதி வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்த இந்த ஊர்வலம், புனித வாரத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாகும்.

ஊர்வலம் முடிந்து ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. வருகிற மார்ச் 29 ஆம் தேதி புனித வெள்ளி மற்றும் மார்ச் 31 ஆம் தேதி ஈஸ்டர் பண்டிகை அனுசரிக்கப்படுவதால், இந்த நாட்களில் இயேசு உயிர்த்தெழுந்ததை கொண்டாட கிறிஸ்தவ சமூகம் தயாராகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...