அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் மட்டுமே பாஜக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி - முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி

அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் பாஜக நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்றதாகவும் நாடாளுமன்றத் தேர்தலில் அவர்கள் நமக்கு போட்டியும் இல்லை, அவர்களால் வெற்றி பெறவும் முடியாது என திருப்பூரில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி


திருப்பூர்: திருப்பூர் அரிசி கடைவீதியில் உள்ள திருப்பூர் மாநகர மாவட்ட அதிமுக அலுவலகத்தில் திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும் மேற்கு மண்டல அதிமுக பொறுப்பாளருமான எஸ்பி வேலுமணி கலந்து கொண்டிருந்தார்.

இதனிடையே, தேர்தல் பணியாற்றுவது குறித்து தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தமிழகம் முழுவதும் திமுகவிற்கும் அதிமுகவிற்கும் தான் போட்டி எனவும், நமது எதிரி திமுக எனவும், கடந்த முறை பாஜக அதிமுகவுடன் கூட்டணி வைத்ததால் தான் நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற முடிந்ததாகவும் தற்போது சமூக வலைத்தளங்களில் வளர்ந்து விட்டது போல ஒரு மாயையை அவர்கள் உருவாக்கி வருவதாகவும், ஆனால் உண்மையில் அவ்வாறு இல்லை எனவும், இம்முறை அவர்கள் வெற்றி பெறப்போவதில்லை அதனால் அவர்கள் நமக்கு போட்டி இல்லை என பேசினார்.



இந்த தேர்தல் முக்கியமான தேர்தல் நம்மை விட்டு பிரிந்து சென்றவர்களுக்கு நம் பலத்தை காட்டக்கூடிய தேர்தல் எனவும் பேசினார். கடந்த முறை 38 எம்பிக்களை வைத்திருந்த திமுகவினர் என்ன செய்தார்கள் எனவும் இதற்கு முன் நமது எம்பிக்கள் தமிழ்நாட்டின் உரிமைக்காக மக்களவையை முடக்கி உரிமைகளை பெற்றுத்தந்த வரலாறுகளை மக்களிடம் சொல்லி வாக்கு கேட்க வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், திருப்பூரில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிடக் கூடிய சூழ்நிலையில் தற்போதுள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு கொள்கை இல்லை எனவும் திமுகவிடம் அடிமையாகி விட்டதாக விமர்சனம் செய்து பேசினார். இந்த வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பொள்ளாச்சி ஜெயராமன் எம் எஸ் எம் ஆனந்தன் விஜயகுமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டிருந்தனர்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...