வாக்குப்பதிவு இயந்திரங்கள் காங்கேயம் பாதுகாப்பு‌ அறையில் தயார் நிலை

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கேயம் வட்டாட்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது.



திருப்பூர்: வரும் ஈரோடு பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு திருப்பூர் மாவட்டம் 102 காங்கயம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 295 வாக்குசாவடிகளுக்கு உண்டான 356 வாக்கு இயந்திரங்கள், 386 விவி பேடு ஆகியவை நேற்று மதியம் சுமார் 12 மணியளவில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து காங்கயம் வட்டாச்சியர் அலுவலகத்திற்கு எடுத்துவரப்பட்டது.

துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு வேனில் எடுத்து வரப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராம்குமார் மற்றும் காங்கயம் வட்டாச்சியர் மயில்சாமி ஆகியோர் முன்னிலையில் சீல் அகற்றப்பட்டு வேனில் இருந்த பெட்டிகள் அனைத்தும் பத்திரமாக வட்டாச்சியர் அலுவலகத்தில் உள்ள ஸ்ட்ராங் ரூம் எனப்படும் தேர்தல் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டது. பின்னர் அந்த அறை சீல் வைக்கப்பட்டு கூடுதல் பாதுகாப்புடன் கண்காணிக்கப்படுகிறது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...