ரேஷன் கடைகளில் மானிய விலையில் தேங்காய் எண்ணெய் - பொள்ளாச்சி தொகுதி திமுக வேட்பாளர்

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வேட்பு மனு தாக்கலுக்குப் பின்பு திமுக வேட்பாளர் ஈஸ்வரசாமி பேட்டி.


கோவை: பொள்ளாச்சி நாடாளுமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக ஈஸ்வரசாமி போட்டியிடுகிறார்.



இவர் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி கேத்தரின் சரண்யாவிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.



இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேட்பாளர் ஈஸ்வரசாமி,

தென்னை விவசாயிகளின் அடிப்படை கொப்பரை விலை கிடைக்கவும், ரேஷனில் தேங்காய் எண்ணெய் மானிய விலையில் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இளைஞர்களுக்கு தென்னை நார் மதிப்பு கூட்டப்பட்ட பொருளாக மாற்று பயிற்சி மையம் அமைக்கப்படும் என்றார்.

மேலும், பொள்ளாச்சி ரயில் நிலையத்தை மதுரை அல்லது சேலம் கோட்டத்துடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும், இந்து சமய அறநிலையத்துறை மூலமாக ஆனைமலையில் தொழில் பயிற்சி கல்லூரி அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும், கோவை, திருப்பூர், கரூர், ஈரோடு மக்களின் குடிநீர் தேவைக்கு ஆனைமலை நல்லாறு திட்டம் நிறைவேற்றப்பட நடவடிக்கை எடுக்கப்படும், தென்னை பயிற்சி மையம் ஆராய்ச்சி நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் தேர்தல் வாக்குறுதி அளித்தார்.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...