தாராபுரத்தில் கொடுத்தல் வாங்கல் தகராறு; இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவர் கைது..!

இந்து மக்கள் கட்சியின் பெண் மாநில நிர்வாகியை தாக்கிய வழக்கில், அதே கட்சியை சேர்ந்த மாவட்ட நிர்வாகிகள் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைப்பு.


திருப்பூர்: தாராபுரத்தில் கொடுத்தல் வாங்கல் தகராறில் இந்து மக்கள் கட்சியின் பெண் மாநில நிர்வாகியை தாக்கிய வழக்கில் இந்து மக்கள் கட்சி மாவட்ட நிர்வாகிகள் இருவரை போலீசார் கைது செய்தனர்.

இச்சம்பவம் குறித்து தாராபுரம் போலீஸ் தரப்பில் கூறியிருப்பதாவது,

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் கொண்டரசம்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் மதிவாணி( 34) இந்து மக்கள் கட்சியில் மாநில பெண் நிர்வாகியாக உள்ளார். இவர் தாராபுரம் பேருந்து நிலையம் அருகே பியூட்டி பார்லர் வைத்து நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தாராபுரம் அடுத்த காந்திஜி நகரைச் சேர்ந்த சங்கர் (51) இவர் இதே கட்சியில் அமைப்புக் குழு தலைவராகவும், இவரது நண்பர் சுரபிமணி (53) இவரும் மாவட்ட பொதுச் செயலாளராக உள்ளார்.

இந்நிலையில் சங்கர், மதிவாணியிடம் வட்டிக்கு கடனாகப் பணம் பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. பணம் கேட்டு சங்கரிடம் போனில் பேசிய போது இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. இது குறித்து சங்கர் தனது மனைவியிடம் கூறியபோது கோபமடைந்த சங்கர், மனைவி இருவரும் சேர்ந்து மதிவாணி பியூட்டி பார்லருக்கு சென்று வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். மேலும், ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டனர்.

இதில் சுரபிமணியும் அவர்களை தடுத்து விட்டதாக கூறப்படுகிறது. சண்டையில் மதிவாணி காயமடைந்து தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற போது, போலீசார் வாக்கு மூலம் பெற்று மதிவாணியை தாக்கியதாக சங்கர் மற்றும் சுரபிமணி ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து, இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

தாராபுரத்தில் இந்து மக்கள் கட்சியினர் ஒருவரையொருவர் தாக்கி கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...