வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோவிலில் விமர்சையாக நடைபெற்ற  பங்குனி உத்திர திருவிழா..!

கடந்த 21 ஆம் தேதி கொடியேற்றத்துடன்  தொடங்கிய 72 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழாவில்,  திருக்கல்யாணம், அன்னதானம், காவடி என பல்வேறு நிகழ்ச்சிகளில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் வால்பாறையில் உள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் 72 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடைபெற்றது. 

ஒவ்வோரு ஆண்டும், இக்கோவிலில் பங்குனி உத்திரம் திருவிழா வெகு விமர்சையாக கொண்டாபட்டு வரும் நிலையில்,

கடந்த 21 ஆம் தேதி திருக்கொடியேற்றத்துடன் இவ்வாண்டு திருவிழா தொடங்கியது.



தொடர்ந்து, பாரம்பரிய முறைப்படி 23 மற்றும் 24 ஆம் தேதிகளில் கொடுமுடி பகுதியில் இருந்து எடுத்து வரப்பட்ட தீர்த்தங்களுடன், தேன், தினைமாவு கலந்து சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.பின்னர், நேற்று 24 ஆம் தேதி, திருக்கல்யாண நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெற்றது,

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக, வால்பாறை முருக பக்தர்கள் குழுவினரின் சார்பில் நடைபெற்ற சுத்து காவடி, அங்கு, அலகு காவடி மற்றும் பறவைக் காவடியுடன் பால்குடம் மற்றும் தீர்த்தக் குடம் எடுத்து கோவில் சென்றடைந்தது பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

அதைத்தொடர்ந்து இறுதி நாளான இன்று மாபெரும் அன்னதானம் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது.இதில், நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். 

வால்பாறை ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் மிக சிறப்பாக நடைபெற்ற இந்த 72 ஆம் ஆண்டு பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...