100 சதவீதம் வாக்குப்பதிவு: திருப்பூரில் இருசக்கர விழிப்புணர்வு பேரணியை ஆட்சியர் துவக்கி வைத்தார்

100 சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில், திருப்பூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் இருசக்கர வாகன பேரணியை, ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் உதவி ஆட்சியர்  கொடியசைத்து துவக்கி வைத்தனர்.


திருப்பூர்: தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வரும் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்வு வாக்குப்பதிவு நடைபெற உள்ள நிலையில், 18 வயது நிரம்பிய அனைவரும் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 



அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 100% வாக்களிப்பதை உறுதி செய்யும் வகையில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது. 



திருப்பூர் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மற்றும் உதவி ஆட்சியர் கிருத்திகா விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்தனர். 



வாக்களிப்பது நம் உரிமை, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்களிப்போம் என்ற விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு இருசக்கர வாகனத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...