100 சதவீதம் வாக்களிப்பு:  மாற்றுத்திறனாளிகள் உறுதிமொழி ஏற்பு..!

பார்வை குறைபாடுடைய  மாற்றுத்திறனாளிகள், தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்தி குமார் பாடி  முன்னிலையில் எடுத்துக் கொண்டனர்.


கோவை: 

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு இன்று (26.03.2024) மாற்றுத்திறனாளி வாக்காளர்கள், 100 சதவீதம் வாக்களிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். 

நிகழ்ச்சியில், பார்வை குறைபாடுடையமாற்றுத்திறனாளிகள் தேர்தல் விழிப்புணர்வு உறுதி மொழியினை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடிமுன்னிலையில் எடுத்துக் கொண்டனர். 



இன்று கோவையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பொள்ளாச்சி நாடாளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்/மாவட்ட வருவாய் அலுவலர் மோ.ஷர்மிளா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சுரேஷ் ஆகியோர் உடனிருந்தனர்.

மாற்றுத்திறனாளிகள் மத்தியில் 100% வாக்களிப்பதை ஊக்குவிக்கும் முயற்சியில், சென்னை மாநகராட்சி பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் இருந்துபிரதிநிதிகளை தெரிந்தெடுத்து, அவர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகள் (பார்வை குறைபாடு, தொழு நோயிலிருந்து மீண்டவர்கள், செவித்திறன் குறைபாடு, லோகோ மோட்டர் குறைபாடு, ஆட்டிசம் ஸ்பெக்ட்ரம், மல்டிபிள் ஸ்களீரோசிஸ்) என 21 வகையான குறைபாடுகளால் பாதிக்கப்பட்டவர்கள் சிரமமின்றி வாக்களிக்க உதவுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை விமான நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: வதந்தி என உறுதி

கோவை விமான நிலையத்திற்கு நேற்று இரவு வெடிகுà...